உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / " இந்தியா நிலவில் இறங்குது., பாகிஸ்தான் சாக்கடையில் விழுகுது" - எம்.பி., பேச்சு வைரல்

" இந்தியா நிலவில் இறங்குது., பாகிஸ்தான் சாக்கடையில் விழுகுது" - எம்.பி., பேச்சு வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ‛‛ இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது'' என அந்நாட்டு பார்லிமென்டில் எம்.பி., பேசியது வைரல் ஆகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fzrymvml&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்லிமென்டில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது: இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவல நிலை நிலவுகிறது. டிவி திரையில் நிலவில் தரையிறங்கி இந்தியா சாதனை படைத்தது என்ற செய்தி வந்தது. அடுத்த 2 நிமிடங்களில், கராச்சியில் திறந்த வெளி சாக்கடையில் விழுந்து குழந்தை இறந்தது என்ற செய்தியும் வந்தது.பாகிஸ்தானின் வருவாய் இயந்திரமாக கராச்சி உள்ளது. பாகிஸ்தான் உருவானதில் இருந்து கராச்சியில் தான் இரண்டு துறைமுகங்கள் செயல்படுகின்றன. பாகிஸ்தான், மத்திய ஆசியா முதல் ஆப்கன் வரை நுழைவு வாயிலாகவும் இருக்கிறோம். ஆனால், 15 ஆண்டுகளாக தூய்மையான குடிநீரை கராச்சி நகருக்கு வழங்க முடியவில்லை. தண்ணீர் வந்தாலும், டேங்கர் மாபியா அதனை பதுக்கி வைத்து மக்களிடம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்து கொண்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Agni Kunju
மே 17, 2024 04:30

பாக்கிஸ்தான்காரனே மேல் இந்த உள்நாட்டு ஏஜென்டுகள் தொல்ல தாங்கள…


RAJ
மே 16, 2024 22:57

கருத்து சொன்ன களஞ்சியமே , நீ அப்படிதாண் பேசுவ


Easwar Kamal
மே 16, 2024 22:55

உடனே மோடிஆள் தன இது எல்லாம் நடந்தாது ன்னு புருடா விடுவானுங்க மோடிக்கு முன்னரே இஸ்ரோ இருக்கு அப்போதில் இருந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் காலம் சென்ற கலாம் அவர்கள் இந்த இஸ்ரோவில் இருந்துதான் வந்தவர்


A1Suresh
மே 16, 2024 22:22

கண் போன போக்கிலே கால் போகலாமா ? கால் போன போக்கிலே மனம் போகலாமா ?


Syed ghouse basha
மே 16, 2024 21:32

இந்து முஸ்லீம் ராமர் கோவில் சீதைக்கு கோவில் பாகிஸ்தான் இதை தவிர வளர்ச்சி திட்டங்கள் வேலைவாய்ப்புகள் மக்கள் நல திட்டம் இதனால் இந்தியாவின் வளர்ச்சி என ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா பஜக வால்


Kasimani Baskaran
மே 17, 2024 04:47

ஒன்று: முத்தலாக்கை நீக்கியது இரண்டு: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் பதினோரு சதவிகிதத்தை சாப்பிட்டுக்கொண்டு இருந்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து சாதனை படைத்தது தீவிரவாதத்தையும் பாக்கிஸ்தான் போட்ட இந்திய கள்ள நோட்டு மூலம் வாழ்ந்து வந்தவர்களை மீட்டெடுத்து இன்று சுற்றுலாவை வளர்ச்சிப்பாதையில் செலுத்தியது மூன்று: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு தடுப்பூசி மூலம் கோவிட் பேரிடரில் இருந்து இந்தியர்களை பாதுகாத்து பொருளாதாரத்தில் பிரிட்டனையும் ஜெர்மனியையும் முந்தியது காங்கிரஸ் ஆண்டிருந்தால் தடுப்பூசியை மட்டுமே வைத்து இந்தியாவை திவாலாக்கி இருப்பார்கள் வேலையும் சாப்பாடும் இல்லாமல் பாதிப்பேர் மடிந்திருப்பார்கள் இது போதுமா?


venugopal s
மே 16, 2024 20:08

முழுக் குருடனை விட ஒற்றைக் கண்ணன் தேவலை என்பது போல் தான்!


Ramesh Sargam
மே 16, 2024 19:29

சாக்கடையில் விழுந்த பாகிஸ்தானை மீட்கத்தான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயல்கிறது


Tiruchanur
மே 16, 2024 19:05

இவங்க வழிகளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்


Multivision
மே 16, 2024 17:18

நமக்கு கீழேயும் மேலேயும் பல நாடுகள் இருக்கலாம், ஆனால் நாம் வேண்டாம் என்று சென்றவர்கள் முன் நாம் நன்றாக இருக்கிறோம் அது தான் முக்கியம்


VS Velmurugan
மே 16, 2024 17:03

வினை விதைத்தவன் வினை அறுப்பான்தீதும் நன்றும் பிறர் தர வரா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை