உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அரசு செலவிட்ட ரூ.409 லட்சம் கோடி எங்கே?

அமெரிக்க அரசு செலவிட்ட ரூ.409 லட்சம் கோடி எங்கே?

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து, 409 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக செலவானது என்ற கணக்கு காட்டப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா அமைப்பை உருவாக்கினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் செய்யப்படும் வீண் செலவுகளை தடுப்பது, கணக்குகளை முறைப்படுத்துவது போன்றவற்றுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இதன் தலைவராக உள்ளார். உலகெங்கும் பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி, இந்த அமைப்பு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அரசின் கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், ஒரு கணக்கு குறியீடு இருக்கும். இந்தக் குறியீட்டின் அடிப்படையில்தான், பட்ஜெட்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, அது எவ்வாறு செலவிடப்பட்டது என்பது தெரியவரும்.டி.ஓ.ஜி.இ., கருவூலத் துறை மற்றும் மத்திய வங்கி ஆகியவை இணைந்து சமீபத்தில் ஆய்வுகள் நடத்தின. இதில், கருவூலத்தில் இருந்து, 4-09 லட்சம் கோடி ரூபாய்க்கான செலவினங்களுக்கு, எவ்வித கணக்கு குறியீடும் இடம்பெறவில்லை. இதனால், இந்தத் தொகை, யாருக்கு, எதற்காக வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இனி ஒவ்வொரு செலவினத்துக்கும், பரிவர்த்தனைக்கும் கணக்கு குறியீடுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மஸ்க்குக்கு அதிகாரம் இல்லை!

அமெரிக்க அரசின் செலவினங்களை ஒழுங்குபடுத்தவும், சீரமைக்கவும் உருவாக்கப்பட்டது, டி.ஓ.ஜி.இ., என்ற அமைப்பு. இது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் தலைவராக உள்ள எலான் மஸ்க் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பல துறைகளில் உள்ளவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளுக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குறிப்பாக எலான் மஸ்க்கின் அதிகார எல்லை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் நிர்வாகத் துறை இயக்குனர் ஜோஷுவா பிஷர் கூறியுள்ளதாவது:வெள்ளை மாளிகையில் உள்ள மற்ற ஆலோசகர்களைப் போல முடிவு எடுக்கும் எந்த ஒரு அதிகாரமும் எலான் மஸ்க்குக்கு கிடையாது. தன் பரிந்துரைகளை அவர் அதிபருக்கு தெரிவிக்கலாம்; அவ்வளவுதான். முடிவுகளை அதிபரே எடுப்பார். எந்த ஒரு உத்தரவையும் மஸ்க் பிறப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
பிப் 19, 2025 11:29

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது இதை விட மோசமாக இந்தியாவின் நிலைமை இருக்கும்!


சண்முகம்
பிப் 19, 2025 11:02

டரம்பும் மஸ்க்கும் பொய்யர்கள், கொள்ளையர்கள். நிறைய செலவினங்கள் (உளவு மற்றும் ராணுவ செலவினங்கள் போன்றவை) பல தடைகளை கடந்தே பார்க்க முடியும். அரசால் வேலைக்கு அமர்த்தாமல், 18 வயது, 19 வயது அள்ளக்கைகள் கல்லூரிக்கு கூட நுழைய முடியாத கைக்கூலிகள் மூலம் கணக்கு பார்த்து புலம்புகிறார்கள்.


ராம்சேட்
பிப் 19, 2025 07:01

இதே கேள்விதான் நாளை ஆட்சி மாறினால் இங்கும் கேட்கப்படும்.


Anand
பிப் 19, 2025 10:38

ஆனால், திருட்டு திரவிடியத்திடம் இருந்து ஒரு பதிலும் வராது.....


Laddoo
பிப் 19, 2025 11:46

ஊழலுக்கே மரியாதை வாரிசுக்கே அடிமை பொய்யே போதை


Rangarajan Cv
பிப் 19, 2025 16:10

Sir, this is not question, inference from Audit trail. Hope you understand the difference.


Iyer
பிப் 19, 2025 06:10

ஒபாமாவும் பில் க்ளிண்டனும் அமெரிக்காவை கொள்ளை அடித்து இருக்கிறார்கள் - அவர்கள் ஆட்சி காலத்தில் - என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இந்தியாவை போல் - அமெரிக்காவிலும் வழக்கு தொடுத்து - முதலில் கொள்ளை அடித்த பணத்தை பறிமுதல் செய்யவேண்டும்.


Kasimani Baskaran
பிப் 19, 2025 06:08

தீம்க்காவில் கணக்குக்கேட்டவுடன் எம்ஜியாரை கட்சியை விட்டு நீக்கினார்கள் அது போல மஸ்க்குக்கு நடக்காமல் இருக்கவேண்டும். டாலரை அச்சிடுவது எளிது என்பதால் அச்சிட்டு அச்சிட்டு சீனாவும், பாகிஸ்தானும் இந்திய நோட்டுகளை அச்சடித்து தீவிரவாதிகளுக்கு கொடுப்பது போல கண்டவர்களுக்கும் கொடுத்து பல நாடுகளை நாசம் செய்வது அமெரிக்காவில் வழக்கமான நடைமுறை. கணக்குக்கேட்டால் அதெல்லாம் வெளியே வரும்...


Bye Pass
பிப் 19, 2025 04:32

நம்ம திராவிட செம்மல்களுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்குமே ..சென்னைக்கு வந்த ரெயில் நியூ யார்க் சென்று இருந்தால் நம்ம லெவல் இன்னும் பெருசா இருந்திருக்குமே என்று ஏக்கத்தில் இருப்பார்களே ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை