உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபருக்கும் அழைப்பா? வெள்ளை மாளிகை பரிசீலனை

டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபருக்கும் அழைப்பா? வெள்ளை மாளிகை பரிசீலனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வரும் 15ம் தேதி அமெரிக்கா - ரஷ்யா அதிபர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுப்பது தொடர்பாக வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அவரின் முயற்சியை ரஷ்ய அதிபர் புடின் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து போரை நிறுத்த டிரம்ப் கெடு விதித்தார். பொருளாதார தடை விதிக்கப்படும் என கெடு விதித்தார். இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினை, டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்தார்.இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப் - புடின் வரும் 15ம் தேதி சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். அப்போது போர்நிறுத்தம் முக்கிய பேசு பொருளாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை ரஷ்யா ஏற்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் உக்ரைன் இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.இந்த நிலையில், டிரம்ப் - புடின் இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக, அமெரிக்கா ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்பாரா என்பதில் தெளிவாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

HoneyBee
ஆக 10, 2025 17:14

ஆக மொத்தத்தில் இரண்டு ஜோக்கர் புடின் எதிர் கொள்ள வேண்டுமா. பாவம்யா அவரு...


Ramesh Sargam
ஆக 10, 2025 14:26

அங்கு ஒரே ஒருவர்தான் பேச அனுமதி. அவர் டிரம்ப். மற்றவர்கள் அவர் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்.


அன்பு
ஆக 10, 2025 15:58

டிரம்ப் பேசி பேசி காமெடி செய்வார். புதின் கதாநாயகன் பேசாமல் சாதிப்பார்.


SUBBU,MADURAI
ஆக 10, 2025 19:33

கிடையாது புடின் மட்டும்தான் அங்கே பவர்ஃபுல் KING மற்ற இரண்டு பேரும் காமெடிப் புலவர்கள்...


ஆரூர் ரங்
ஆக 10, 2025 14:23

சென்ற முறை டிரம்மார் ஜெலன்ஸ்கியை சந்தித்து சண்டையிட்டது மறக்காது. ஜெலன்ஸ்கி டி சர்ட் அணிந்து ராகுல் போலவே பேசினார். இப்போ டிரம்மாரும் அதே போல பேசுறார்.


saravan
ஆக 10, 2025 14:23

அந்தக் கோமாளியுமா இரண்டு பேரை புடின் எப்படி சமாளிப்பது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை