உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டைம் இதழின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி சிறுமி

டைம் இதழின் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி சிறுமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: முதியவர்களைஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாப்பது தொடர்பான ஆய்வுத் திட்டத்துக்காக டைம் இதழின் ' Kid of the Year 2025' பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஜஸ்வி மனோஜ்(17) சிறுமி இடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டைம் இதழ், ஆண்டுதோறும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் வயதினரை கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான ' Kid of the Year 2025' என்ற விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஜஸ்வி மனோஜ் என்ற சிறுமிக்கு கிடைத்துள்ளது.இவரின் பெற்றோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தேஜஸ்வி, கலிபோர்னியாவில் பிறந்து டல்லாசில் வளர்ந்தவர். தேஜஸ்வி பள்ளியில் வயலின் இசைக்கலைஞராகவும், சில தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலர் ஆகவும் உள்ளார். ஏஐ அல்லது சைபர் பாதுகாப்பு தொடர்பான கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் நோக்கத்தில் உள்ளார்.அவரது தாத்தா சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதியவர்களை பாதுகாக்கும் வகையிலான 'Shield Seniors' என்ற என்ற திட்டத்தில் ஆய்வு நடத்தினார். இதனை பாராட்டியே டைம் இதழ் அவரை கவுரவித்துள்ளது. முன்னதாக, டெக்சாசில் டிஜிட்டல் கட்டமைப்பு ஏற்படுத்துதல் தொடர்பான மாநாட்டிலும் அவர் கலந்துரையாடலில் அவர் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

mani subramanian
செப் 12, 2025 16:14

அவள் எங்களது பேதி. இந்த செய்தி உள்ள பதிப்பை அனுப்பிக்கொடுங்கள் டி 403, ஓக் பார்க் அபார்ட்மென்ட் , சரவணம்பட்டி , சத்தி ரோடு கோவை 641035. நன்றி


mani subramanian
செப் 12, 2025 16:14

அவள் எங்களது பேதி. இந்த செய்தி உள்ள பதிப்பை அனுப்பிக்கொடுங்கள் டி 403, ஓக் பார்க் அபார்ட்மென்ட் , சரவணம்பட்டி , சத்தி ரோடு கோவை 641035. Nandri


Padmasridharan
செப் 12, 2025 05:21

முதியவர்களை பாதுகாக்கும் வகையிலான Shield Seniors என்ற என்ற திட்டத்தில்.. "ஏன் இரண்டு முறை "என்ற" அய்யா


Haja Kuthubdeen
செப் 11, 2025 09:57

ஆரம்பித்துட்டானுங்க... நம் இந்திய நாட்டிற்கு சேவை செய்யும் குடும்பமா????


SANKAR
செப் 11, 2025 07:54

is this 17 years old " sirumi"?!


mani subramanian
செப் 12, 2025 16:15

ஆமாம்


ஆரூர் ரங்
செப் 10, 2025 22:03

வம்ச வழி.


Varadarajan Nagarajan
செப் 10, 2025 22:00

மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியர்கள் நுணுக்கமான அறிவுத்திறன் கொண்டவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மென்மேலும் வளர வேண்டுகின்றோம்


mani subramanian
செப் 12, 2025 16:16

மிக்க nandri


Anu Sekhar
செப் 10, 2025 21:26

Way to Go Good luck


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை