உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குர்பத்வந்த்சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த உளவு அதிகாரி யார் : அமெரிக்க ‛பகீர்

குர்பத்வந்த்சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த உளவு அதிகாரி யார் : அமெரிக்க ‛பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த்சிங் பன்னூனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்திய உளவு அதிகாரியின் பெயரை அமெரிக்க பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2022ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால் இந்திய -கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.இதே போன்று கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது, கொலை முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இந்திய உளவு அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்த சூழ்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‛‛வாஷிங்டன் போஸ்ட்'' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்யும் முயற்சியில் சிசி-1 என்ற ரகசிய ஏஜென்டாக இந்தியா உளவு அமைப்பின் ‛ரா ' அதிகாரி விக்ரம் யாதவ் என்பவரின் தலைமையிலான குழு நியூயார்க் நகரில் இருந்து திட்டம் திட்டியது. அமெரிக்க மண்ணில் நடந்துள்ள இந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஏப் 30, 2024 12:29

வடக்கு கரோலீனா என்கிற மாகாணத்தில் துப்பாக்கி சூட்டில் நான்கு போலீசார் மரணம் இது செய்தி இந்த தொடர் துப்பாக்கி சூட்டுக்கு ஒரு முடிவுகட்ட துப்பில்லாத அமெரிக்க அரசாங்கம், அனாவசியமாக அந்த காலிஸ்தான் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்று தெரிந்தும் அவர்களுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது நடக்கும் தொடர் துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லையாம் இதில் மேலும் ஒரு தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாம், அதுவும் இந்தியாவை பகைத்துக்கொண்டு


Anantharaman
ஏப் 30, 2024 08:17

திட்டம் தீட்டி என்ன பயன்?


Kasimani Baskaran
ஏப் 30, 2024 06:01

தீவிரவாத ஆதரவு கட்சியானது கனடாவை ஆள்வதால் வந்த சிக்கல் இது ஏற்கனவே போதைப்பொருள் கடத்திய டுரூடோவை அடுத்த முறை இந்தியாவுக்குள் விடக்கூடாது


KR india
ஏப் 30, 2024 04:56

நாங்கள் இந்தியாவின் சிறந்த நட்பு நாடு என்று கூறி கொண்டு, வலது கையை இந்தியாவிடம் நீட்டி கைகுலுக்கிக் கொண்டே, முதுகுக்குப் பின்னால் இடது கையை, இந்திய பிரிவினை தீவிரவாதிக்கு கைகுலுக்குவது இரு பெரும் ஜனநாயக நாடுகளிடையேயான நட்பை கொச்சை படுத்துவதாகும் உண்மையான நட்பு நாடு என்றால் இந்தியாவுக்கு எதிராக காலிஸ்தான் என்று தனி நாடு வேண்டும் என்று பிரிவினை பேசும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது இந்தியாவிடம் அவர்களை ஒப்படைத்து விடுவதே சிறந்த ராஜ தந்திரம் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் சில ஆயிரம் பிரிவினைவாதிகளுக்காக, இந்திய அமெரிக்கா உறவு பாதிப்படைய கூடாது Long Live India America Relationship


குமரன்
ஏப் 29, 2024 22:44

கனடா மற்றும் அமெரிக்காவின் செயல் மிகவும் கண்டணத்திற்குறியது


theruvasagan
ஏப் 29, 2024 21:51

நாட்டு்க்கு துரோகம் செய்யும் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் ஒழிக்க நேரம் காலம் இடம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதைத்தானே அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்து வருகின்றன. நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது.


விடியல்
ஏப் 29, 2024 21:02

அமெரிக்கா கார்ன் எந்த த நாட்டிலும் யாரைவேண்டுமானாலும் சொல்லுவான்.உதாரணம் பாக்கிஸ்தானில் பதுங்கி இருந்த அங்கு சென்று பின்லேடனை கொன்றான் ரஷ்ய உளவாளிகள் பலரை போட்டு தள்ளினார்கள் அதெல்லாம் அவன் செய்யும் போது இந்திய தீவிர வாதி களை காப்பாற்ற எவ்வளவு பணம் வாங்கி இந்த ஏஜென்சி செயல் படுகிறது. சீக்கிரம் அழிவு காலம் அமெரிக்க பொருளாதாரம் அழிய இரண்டு வருடங்கள் அதிகபட்சமாக


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2024 20:48

அமெரிக்க மட்டும் அடுத்தவன் வீட்டில் புகுந்து குற்றவாளியை கொல்லும் இந்தியா மட்டும் என்ன இளித்தவாய் என்றா நினைக்கிறீர்கள் உங்கள் நாட்டுக்கு துன்பம் கொடுக்கும் தீவிர வாதிகளை நாடு விட்டு நாடு புகுந்து அழிப்பீர்கள் உங்கள் நாட்டில் இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து விடுவீர்கள் நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா இனி இந்தியாவிற்கு எதிராக பயங்கர வாதிகள் எந்த நாடு உற்பத்தி செய்தாலும் பாரத நாடு எல்லை தாண்டி சென்று அழிக்கும்


vaiko
ஏப் 29, 2024 20:33

மோடி, அமித் ஷா ஆசீர்வாதம் இருந்தால் கோடிகளில் வங்கிகளில் இருந்து கொள்ளை அடித்தாலும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடலாம் நூற்று கணக்கான பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தாலும் வெளிநாடுகளுக்கு தப்பி விடலாம் அமலாக்க துறை வாயில் வாழை palathai வைத்து கொண்டு irukkum


subramanian
ஏப் 29, 2024 20:32

பாரதத்தை பார்த்து பொறாமை அமெரிக்கா வுக்கு சமயம் பார்த்து எதுவும் செய்வான் நாம்தான் ராஜதந்திரம் செய்து தேசத்தின் நலனை காக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை