உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெல்லப்போவது யாரு ? இன்று மைக் டைசன்- ஜேக்பால் மோதும் பரபரப்பான குத்துச்சண்டை:

வெல்லப்போவது யாரு ? இன்று மைக் டைசன்- ஜேக்பால் மோதும் பரபரப்பான குத்துச்சண்டை:

இர்விங்: முன்னாள் உலக ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசன், 58, யூடியூப்பர் ஜேக்பால்,31 மோதும் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நடக்கிறது. முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் 58, இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார். முன்னதாக எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கி தன் புகழை இழந்துவிட்டார். இதனால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜேக்பால் ,31 என்ற பிரபல 'யூடியூப்'பர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.இன்று நடைபெற உள்ள போட்டியில் மைக் டைசனை எதிர்கொள்கிறார். எனவே 20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் திறமையை காண அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
நவ 15, 2024 04:54

மைக் டைசன் வயதாகிவிட்டபடியால் தோற்க வாய்ப்பிருக்கிறது.


Senthoora
நவ 15, 2024 06:36

ஆனால், அனுபவம் இருக்கு, 60 தை 20 ஆல் வெல்லமுடியுமோ , பார்க்கலாம் ஆட்டத்தை , என்று கண்ணதாசன் பாடல்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை