உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம்; அமெரிக்க வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம்; அமெரிக்க வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் கூறி உள்ளார்.அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5q216yis&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது நடைமுறையில் இருக்கும் ஹெச் 1 பி விசா என்பது ஒரு மோசடி. இந்த விசா மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்கள் அமெரிக்காவில் வேவைவாய்ப்பு பெறுகின்றனர். இங்குள்ளோரை (அமெரிக்கர்கள்) பணியமர்த்த வேண்டும் என்பது அமெரிக்க நிறுவனங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். தற்போதுள்ள இந்த ஹெச் 1 பி விசா நடைமுறையை மாற்ற போகிறோம். அது மோசமானது என்பதே அதற்கு காரணம். அதனால் தான் அதை டிரம்ப் மாற்ற போகிறார். அவர் தலைமையின் கீழ் அமெரிக்க குடியேற்றக் கொள்கை மறுவடிவமைப்பு செய்யப்படும். மேலும், க்ரீன் கார்டு முறையையும் மாற்ற போகிறோம். நாங்கள் சிறந்த நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம்.இதற்காக தங்க அட்டை திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் தொடங்க உத்தேசித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தது 5 மில்லியன் அமெரிக்கா டாலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு நிரந்தர வசிப்பிடம் வழங்க இந்த திட்டம் வழிவகை செய்யும். இந்த திட்டம் விரைவில் வரும். மாற வேண்டிய நேரம் இது.இவ்வாறு ஹோவார்டு லுட்னிக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சந்திரசேகர்
ஆக 27, 2025 19:34

ஏன் வெளி நாட்டுக்காரன் யாரும் அமெரிக்காவுக்கு வேலைக்கு வர அனுமதி இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.இங்கே சில பேர் டிகிரி முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு போகனும்னு நினைக்கிறாங்க பாரு அவங்களுக்கு ஆப்பு வச்ச மாதிரி இருக்கும்.அமெரிக்க மாப்பிள்ளை தான் வேணும்னு கேட்கிற பெற்றவர்களுக்கு ஆப்பு வச்ச மாதிரி இருக்கும்


VENKATESAN
ஆக 27, 2025 17:04

5 மில்லியன் டாலர் இருந்தால் எவன் அமெரிக்காவுக்கு போவான்?


m.arunachalam
ஆக 27, 2025 16:57

காலி பெருங்காய டப்பா . வீழ்ச்சி உறுதி. நாட்டாமை வேலையை விட்டு விட்டு யதார்த்த நிலை உணர்ந்து செயல் படும் முடிவு நல்லது.


Rathna
ஆக 27, 2025 16:46

நாட்டில் 60% பேர் பத்தாவது கூட தாண்டாத நாடு அதிக அளவு குடி, வன்புணர்வு, குழந்தை வயதில் கர்பம், சமூக அநீதிகள், வீட்டை விட்டு வெளியில் போனால் திரும்ப முடியுமா என்பது கேள்வி குறி உள்ள நாடு என்ன கார்டு வேண்டுமானாலும் கொடு..


Santhakumar Srinivasalu
ஆக 27, 2025 19:10

கட்டாய பட்டதாரி படிப்பு இளைஞர்களுக்கு அவசியம் என்று சட்டம் கொண்டு வந்து அமெரிக்காவை முன்னேற்ற எந்த அதிபராவது முயற்சித்தாரா? அது வரை கல்வி இலவசம் என்று பெரியண்ணன் அரசு செய்திருக்கிறதா? இதை எந்த அரசாவாது செய்திருந்தால் ஏன் தொழில் வளராமல் போகும்? அவர்கள் வேலை வாய்ப்பு எங்கே போகும்?


Sundaram PM
ஆக 27, 2025 16:35

அது உங்கள் நாடு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் உங்கள் நாட்டிற்கு நன்மை ஏற்படுவதற்கு செய்யலாம். அது உங்கள் உரிமை, அதற்கு முன்னதாக உங்கள் ஊரில் ஒரு சொந்த மக்களில் 30% பேர்களாவது ஒரு 10ங்கிளாசாவது பாசானவர்கள் இருக்கிறார்களா என சோதித்துக்கொள்ளவும். ஏன்னா உங்கள் நாடு என்பதே அந்நிய நாட்டு மூளையால் வளர்ந்தநாடு.


Shivakumar
ஆக 27, 2025 12:59

நீங்கள் பேசாமல் அமெரிக்கரை தவிர மற்ற நாட்டவர்கள் அனைவரையும் அவரவர் நாட்டுக்கு அனுப்பி விடுங்கள். உங்களுக்கு மற்ற நாட்டவர்கள் தேவையில்லை. அதே மாதிரி வேறு எந்த நாட்டையும் அதை வாங்காதே, இதை வாங்காதே என்று நாட்டாமை செய்ய கூடாது. உங்க வேலையை மட்டும் பார்க்கணும்.


ராமகிருஷ்ணன்
ஆக 27, 2025 12:57

அமெரிக்க ஒரு நாடாக நினைக்க தோன்றவில்லை. மக்கள் குடியேற்றம் வியாபாரம் ஆக மாற உள்ளது. படித்தவர்கள் போய் பணத்திற்கு முக்கியத்துவம் தருவது குற்றவாளிகளை குடிமக்கள் ஆகிவிட வாய்ப்பு ஆகிவிடும்.


N Srinivasan
ஆக 27, 2025 12:20

Make America Gloomy Again MAGA


Shivakumar
ஆக 27, 2025 13:03

நீங்க இருக்கும் அமெரிக்காவே செவ்விந்தியர்களுக்கு சொந்தம். நீங்கள் தான் முதலில் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும். அமெரிக்கா பல நாடுகளில் இருந்து பெரிய பணக்காரர்களை அழைத்து தொழில் செய்து வளர்ந்த நாடு. இப்போ அமெரிக்காவில் இருப்பவர்கள் அமெரிக்காவை சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் கிடையாது.


R. SUKUMAR CHEZHIAN
ஆக 27, 2025 11:58

அமெரிக்க மக்கள் மிக பெரிய அறிவாளிகள் படித்தவர்கள், புத்திசாலிகள், சுறுசுறுப்பானவர்கள், கடுமையாக உழைப்பவர்கள் ஆதலால் விளையாடு துறை உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள வெளிநாட்டவர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி அமெரிக்காவை MAGA ஆக்கவும். டிரம்ப் இருக்க போகும் 3 வருடதில் இதை செயல் படுத்த அமெரிக்கா உளவுத்துறை ஊடகங்களும் துணை நிற்க வேண்டும் பிறகு சோமாலியா சிரியா போன்ற நாடுகள் வரிசையில் அமெரிக்காவும் செய்துவிடலாம். வாழ்த்துகள்.


SP
ஆக 27, 2025 11:06

பணம் வாங்கிக்கொண்டு குடியுரிமை தருவதற்கு ஒரு நாட்டின் நிர்வாகம் எதற்கு? தங்கும் விடுதி நடத்துவது போல் உள்ளது


முக்கிய வீடியோ