உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் மெட்ரோ நிலையங்களில் பெண்களுக்கு கத்திகுத்து

பாரிஸ் மெட்ரோ நிலையங்களில் பெண்களுக்கு கத்திகுத்து

பாரிஸ்: பிரான்ஸ்நாட்டின் தலைநகரில் மெட்ரோ ரயில்நிலையங்களில் மூன்று பெண்களுக்கு கத்தி குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இது குறித்து கூறப்படுவதாவது: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில்புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்பேதாது பாரிசில் உள்ள மூன்று மெட்ரோ ரயில்நிலையங்களில் மூன்று பெண்களுக்கு கத்தி குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ;பாரிசின் ஓபரா , ஆர்ட்ஸ்எட் மெட்டியர்ஸ் மற்றும் ரிபப்ளிஆகிய மூன்று இடங்களிலும் மர்ம நபர் ஒருவர் பெண்களை கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் தொடர்ந்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தனர்.அதில் மூன்று சம்பங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என்பது தெரிய வந்தது. மேலும் மர்மநபர் பயன்படுத்திய சொல்போனை கொண்டு அவன் பாரிசுக்கு அருகே உள்ள வால்டி ஒயி்ஸ் பகுதியில் மறைந்து இருந்தது கண்டறியப்பட்டு கை செய்யப்பட்டான். காயம் அடைந்த பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் நடத்தி விசாரணையில் பயங்கரவாத நடவடிக்கைக்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பவர் போல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை