உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்

உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கோப்பை கபடி போட்டியில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. 11 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன. லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி மற்றும் உகாண்டா அணிகளை வீழ்த்தியதுடன் அரையிறுதியில் ஈரான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தைவான் அணிகள் மோதின. இதில் 35- 28 என்ற புள்ளிக்கணக்கில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இதன் மூலம் கபடி போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை பெண்கள் உலக கோப்பை தொடர்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டுகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிபதக்கத்தையும், ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5வது முறை பட்டத்தையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subramanian
நவ 24, 2025 19:42

வாழ்த்துகள்


ராஜா
நவ 24, 2025 19:40

வாழ்த்துக்கள் வாழ்த்துகள்


Prabhakaran Rajan
நவ 24, 2025 19:34

வாழ்த்துக்கள் சகோதரிகலே


SANKAR
நவ 24, 2025 19:31

there must be a male version.have we ever won? BISON is about Asian Games medal only


Marivignesh J
நவ 24, 2025 19:22

வாழ்த்துக்கள் !


Balaji Ramanathan
நவ 24, 2025 19:14

Congratulations Team India.


karthikeyan
நவ 24, 2025 19:06

இந்த வருடம் விளையாட்டு துறையில் நம்ம பசங்க வெற்றி பெறுவது ரொம்பவும் பெருமையான விஷயம்...வாழ்த்துக்கள்


RAMESH KUMAR R V
நவ 24, 2025 19:05

அபாரம். வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை