உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகக்கோப்பை செஸ் தொடர்:19 வயது திவ்யா தேஷ்முக் சாம்பியன்

உலகக்கோப்பை செஸ் தொடர்:19 வயது திவ்யா தேஷ்முக் சாம்பியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பதுமி: ஜார்ஜியாவில் நடந்த உலகக் கோப்பை செஸ் பைனலில், சக நாட்டு வீராங்கனையான ஹம்பியை வீழ்த்தி இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.ஜார்ஜியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். நாக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது இந்திய வீராங்கனை திவ்யா மற்றும் 'நம்பர்-5' வீராங்கனை ஹம்பி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறினர். அதுமட்டுமில்லாமல், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ், 2026) பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hfxs9u46&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவரும் மோதிய முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தன. டை பிரேக்கர் போட்டி இன்று நடந்தது. இந்தப்போட்டியில், ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thiru, Coimbatore
ஜூலை 28, 2025 20:44

வாழ்த்துக்கள் தங்கம்...இன்னும் பல்லாண்டுகள் இந்த விளையாட்டில் உனது பெயரும் இந்திய கொடியும் பட்டொளி வீசி பறக்கட்டும்


Bvanandan
ஜூலை 28, 2025 19:16

Great God Bless You


ANNADURAI MANI
ஜூலை 28, 2025 18:30

vazhthukkal


KRISHNAN R
ஜூலை 28, 2025 17:38

காங்கிராட்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை