உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகப் புகழ் பெற்ற டெரகோட்டா வீரர் சிலைகள் உடைப்பு; அத்துமீறிய சீனர் கைது

உலகப் புகழ் பெற்ற டெரகோட்டா வீரர் சிலைகள் உடைப்பு; அத்துமீறிய சீனர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா வீரர் சிலைகள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் சீனர் ஒருவர் அத்துமீறி புகுந்து, 2 சிலைகளை உடைத்து விட்டார். அவரை சீன போலீசார் கைது செய்துள்ளனர்.டெரகோட்டா வீரர்கள் அருங்காட்சியகம் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகரில் அமைந்துள்ளது. முதல் சீனப் பேரரசரான கின் ஷி ஹுவாங்கின் கல்லறையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், நம்பிக்கை அடிப்படையில் இந்த வீரர்களின் சிலைகள் உருவாக்கப்பட்டன.மண்ணில் புதைந்திருந்த இந்த சிலைகள் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.இந்த அருங்காட்சியகத்துக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், அருங்காட்சியகத்தில் சீனர் ஒருவர் அத்துமீறி புகுந்து, 2 சிலைகளை உடைத்து விட்டார். அவரை சீன போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபருக்கு 30 என்பது விசாரணையில் தெரியவந்தது.பாதுகாப்பு வேலிகளை அடித்து நொறுக்கி விட்டு உள்ளே நுழைந்த நபரிடம் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது அந்த நபர் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

theruvasagan
மே 31, 2025 22:23

அந்த நபருக்கு சர்வாதிகாரம் செய்யும் பெரிய பெரிய தலைகளையெல்லாம் ஒழிச்சுக்கட்டணும் என்கிற வெறி இருந்திருக்கலாம். அது முடியாது என்று தெரிந்த பிறகு கையில கிடைத்ததை போட்டு உடைச்சுட்டார் போல இருக்கு


சண்முகம்
மே 31, 2025 21:51

டெரகோட்டா (Terracotta) என்றால் சுட்ட மண். சுட்ட மண்ணில் செய்யப்பட்ட அந்த கால சிலைகளை காண சீனா செல்ல வேண்டாம். நம்ம ஊரு அய்யனார் சிலை குதிரை சிலை எல்லாம் டெரகோட்டா தான்.


S
மே 31, 2025 12:12

இந்த நபருக்கு 30 என்பது தெரியவந்தது. என்ன 30? வயதா அல்ல எடையா?


Barakat Ali
மே 31, 2025 14:28

கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது .... உங்க விருப்பப்படி வெச்சுக்குங்க .....


Nada Rajan
மே 31, 2025 10:16

படம் ரொம்ப அருமைங்க


சசிக்குமார் திருப்பூர்
மே 31, 2025 10:09

அப்போ மம்மி 3 படத்தில் வந்தது உண்மையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை