உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் கூறுவது இதுதான்!

அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் கூறுவது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா அணு ஆயுதங்களை சோதிக்குமா? என்ற கேள்விக்கு, '' உங்களுக்கு மிக விரைவில் தெரியவரும்'' என அதிபர் டிரம்ப் பதில் அளித்தார்.அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், கடந்த 1992ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்து இருந்தது. ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க துவங்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார்.டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இம்முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டிவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அமெரிக்கா நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதா என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்து மறுத்துவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:உங்களுக்கு மிக விரைவில் இந்த விவரம் தெரிய வரும். நாங்கள் சில சோதனைகளை செய்ய போகிறோம். மற்ற நாடுகள் அதை செய்கின்றன. அவர்கள் அதை செய்கிறார்கள் என்பதால் நாங்களும் அதை செய்கிறோம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A.Kennedy
நவ 01, 2025 13:22

சரி, இந்தியா ஏன் சும்மா இருக்கணும், நாம் ஏதேதோ செய்கிறோம், நாமும் இந்த அணு ஆயுத சோதனை செய்து விட வேண்டியது தான், பிரதமரிடம் இதையும் எதிர் பார்ப்போம், நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய என்ன செய்கிறது என்று உலக நாடுகள் நம்மை சுற்றியே இயங்க வேண்டும். நல்லதே நடக்கும்.


SUBBU,MADURAI
நவ 01, 2025 13:09

Trump wants allies as servants. Europe bows, Japan kneels, Korea follows. But India with Russia and China? Not happening. And thats good for the world which does not need Colonization 2.0 dressed differently.


Appan
நவ 01, 2025 13:01

போகிற போக்கை பார்த்தால் , அமெரிக்காவும் அணுகுண்டு போரில் இறங்கும் போல் தெரிகிறது. யார் கண்டது இந்த டிரம்ப் செய்தாலும் செய்வார். மக்களை துன்புறுத்தி அவர்களை பார்த்து சந்தோஷப்படுவார் தான் டிரம். அமெரிக்க அரசு கடந்த ஒருமத்துக்கு மேல் மூடியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. அவர்கள் சாப்பாட்டுக்கு கிறார்கள். அதை பற்றஇ டிரம் எதாவது பேசுகிறாரா..?. மாற்றாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார். அங்கு அவருக்கு ராஜா மரியாதைகள் கிடைக்கிறது. அதை பார்த்து சந்தோசப் படுகிறார். இது தான் அமெரிக்க. .அமெரிக்க அணுகுண்டால் பாதிக்க பட்டாள் ஒழிய அவர்கள் திருந்த போவது இல்லை. டிரம் அதை செய்வார்.


duruvasar
நவ 01, 2025 10:43

நிறுத்திட்டேன் நிறுத்திட்டேன் என சொல்லிவிட்டு இப்போ ஆரம்பிக்கிரேன் என்றால் என்ன அர்த்தம்


Ramesh Sargam
நவ 01, 2025 09:24

மற்ற நாடுகள் அதை செய்கின்றன. அவர்கள் அதை செய்கிறார்கள் என்பதால் நாங்களும் அதை செய்கிறோம். மற்றவர்கள் அதை உண்கிறார்கள்


Ramesh Sargam
நவ 01, 2025 08:54

ஆகமொத்தத்தில் உலகை அழிக்க புறப்பட்டுவிட்டனர் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள். ஒரு நேரத்தில் இயற்கையின் சீற்றத்தினால் உலகம் அழியும் என்று நாம் கருதி இருந்தோம். இல்லை, அதற்குமுன்பே மானிடர்கள் அழித்துவிடுவார்கள்.


Barakat Ali
நவ 01, 2025 08:53

ஏழு எட்டு போர்களை நிறுத்திட்டேன் ன்னு சொல்றவரு பண்ணுற வேலையா இது ????


சமீபத்திய செய்தி