உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூசிலாந்து பார்லியில் இளம் பெண் எம்.பி.,யின் கன்னிப்பேச்சு: வீடியோ வைரல்

நியூசிலாந்து பார்லியில் இளம் பெண் எம்.பி.,யின் கன்னிப்பேச்சு: வீடியோ வைரல்

வெல்லிங்டன்: நியூசிலாந்து பார்லிமென்டில், 21 வயதான இளம் பெண் எம்.பி., ஒருவரின் ஆவேச பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.நியூசிலாந்தின் 170 ஆண்டு கால வரலாற்றில், 21 வயதான ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம் பெண் எம்.பி., ஆகி உள்ளார். மாவோரி இனத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 3 தலைமுறைகளுக்கு மேல் அரசியலில் உள்ளது. ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நனையா மஹூதா என்பவரை தோற்க்கடித்து எம்.பி., ஆக தேர்வாகி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mp26ilch&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பார்லிமென்டில் அவர் மாவோரி பழங்குடியின மொழியில் தனது கன்னிப்பேச்சினை பதிவு செய்தார்.அவர் பேசியதாவது: என்னுடைய இந்த முதல் உரையை எனது தாத்தா, பாட்டிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். இங்கு, வருவதற்கு முன்பு, எங்களிடம் பார்லிமென்டில் பேசப்படும் விவகாரங்களில் தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால், உண்மையில் இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதிலும் அரசியல் இருக்கிறது. நாட்டுக்காக உயிரையும் தருவேன். அதேநேரத்தில் உங்களுக்காக வாழவும் செய்வேன் என்றார்.தொடர்ந்து அவர் பழங்குடியின பழக்க வழக்கங்களுடன் நடனம் மற்றும் பாடலுடன் பேசியது அனைவரையும் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பழங்குடியின பழக்க வழக்கங்களுடன் நடனம் மற்றும் பாடலுடன் பெண் எம்.பி., பேசியது அனைவரையும் கவனத்தை ஈர்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜன 07, 2024 01:19

நமது நாட்டில் பல வருடங்களாக அரசியலில் இருந்தும் எழுதிக்கொடுத்த பேப்பரை கூட பார்த்து சரியாக பேசத்தெரியாத பல அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் தன்னுடைய முதல் கன்னிப்பேச்சிலேயே எல்லோரையும் கவர்ந்துவிட்டார் இவள். வாழ்த்துக்கள்.


தாமரை மலர்கிறது
ஜன 06, 2024 22:55

தாத்தா, அப்பா போன்று தானும் அரசியல்வாதி ஆயிட்டோம் என்று எப்படி நமது உதயநிதி குதிக்கிறாரோ, அதே போன்று இந்த பெண்ணும் குதித்துள்ளார். காலி பெருங்காய டப்பா பேச்சு. நாற்றமடிக்கும். ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது.


DVRR
ஜன 06, 2024 18:45

நாசமாப்போச்சு இங்கே முஸ்லீம் நேரு காங்கிரஸ் திருட்டு திராவிட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் என்ன செய்கின்றார்களோ அதே டப்பா இது. இது எப்படி இருக்கின்றதென்றால் ஒரு ஹெட்மாஸ்டர் முதல் நாள் பதவி எடுத்துக்கொண்டபின் பள்ளிக்கு வருவது ஒரு ரோட்டில் அப்போது பல வண்டிகள் வரும் ..........என்று டப்பா அடித்தால் எப்படியோ அப்படி இருக்கின்றது. இதற்குத்தான் முதிர்ச்சி இல்லாதவர்கள் பெரும் பதவி வகித்தால் அவர்களுக்கு இருக்கும் அறிவின் அளவை பொறுத்து வெறும் டப்பாவாகவே இருக்கும். 21 வயது எம்பி மூன்று தலைமுறையாக அரசியல் அப்போ நம்மூர் வாரிசு அரசியல் பெண் பிரியங்கா போலத்தான் தான் இவள்????எம்பி யின் கடமை அந்த பகுதி மக்களின் கூறிய அறிந்து அதை அரசு திருத்தவேண்டும் என்று பாரளுமன்றத்தில் முறையிட்டு அதை நடத்திக்காண்பிப்பது. ந்சம்மூர் எம்பிக்கள் இருக்கின்றார்களே அவர்கள் அங்கு காண்டீனில் ரூ 1 க்கு ஒரு முழு மீல்ஸ் சாப்பிட்டு பிஜேபி தப்பு மோடி தப்பு என்று சொல்வது. என்னடா தப்பு என்றால் அதெல்லாம் கிடையாது பிஜேபி தப்பு மோடி தப்பு என்ன தப்பு என்றால் வரும் ஒரே பதில் தப்பு தப்பு. ஓகே தப்பு தான் அதன் தீர்வு என்ன என்றால் இல்லை அது தப்பு என்று ஒரே வார்த்தையில் உளறுவது.


அப்புசாமி
ஜன 06, 2024 16:25

அங்கே இருக்கும் .....


Barakat Ali
ஜன 06, 2024 15:18

அது கூச்சல் ...........


rajan_subramanian manian
ஜன 06, 2024 11:35

மிகவும் அருமை.ஒன்றும் புரியாவிட்டாலும் இது ஒரு பழங்குடி மக்களின் பண்பாடு என்று புரிகிறது. இந்த மக்களை அடிமைப்படுத்தி (நமது நாட்டைப்போல)அவர்களுடைய பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களை அடியோடு ஒழித்து ஐரோப்பியர்கள் தங்களுடைய மதங்களை மற்றும் கலாச்சாரத்தை புகுத்தி என்னவோ நியூஸிலாந்து மற்றும்,அமெரிக்கா,தென்னமெரிக்கா,ஆஸ்திரேலியா (இந்தியாவில் என்னவோ இன்னும் பாதி மக்கள் தெளிவாக உள்ளார்கள்) மக்கள் வெள்ளையர்கள் என்று சரித்திரத்தை மாற்றிவிட்டார்கள். சென்டினல் தீவு மட்டும் தான் பாக்கி.பாதிரிகள் மதம் மாற்ற முயற்சி இதுவரை பலிக்கவில்லை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி