உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா உடனான உறவை சரி செய்ய முடியும்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை

அமெரிக்கா உடனான உறவை சரி செய்ய முடியும்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க உடனான உறவை சரி செய்ய முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரைன் - ரஷ்யா இடையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய அவர், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் ஆதரவு மீடியாவிற்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்கா மற்றும் டிரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இரு நாட்டு உறவு என்பது, இரண்டு அதிபர்களுக்கும் மேலானது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி என்பது பெரிய அளவிலும், ராணுவ ரீதியிலும் தேவைப்படுகிறது. அமெரிக்கா ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அருண், சென்னை
மார் 01, 2025 20:52

சோரோஸ், ஜோ பைடென், ஒபாமா கிட்டே கேளு உனக்கு உதவுவார்கள். இப்படி உக்கரனை நாசமாக்கியே பெருமை இவர்களையே சாரும்... உயிர் பிரிந்தவர்களின் சாபம் ஸிளேன்ஸ்கியை சும்மா விடாது.


பேசும் தமிழன்
மார் 01, 2025 19:59

இன்னுமாடா இந்த மக்கள்.... நம்மை நம்பி கொண்டு இருக்கிறார்கள்..... இது தான் ஜெலன்ஷ்கியின் மைண்ட் வாய்ஸ் !!!


Mahadevan
மார் 01, 2025 17:01

Do not trust Europe. Be smart with US.


அப்பாவி
மார் 01, 2025 15:39

நம்பிக்கைதான் வாழ்க்கை. ட்ரம்ப் அடிபணிந்து இறங்கி வருவாரு. இல்லே அமெரிக்காவுக்கே சங்குதான்.


Srinivasan Krishnamoorthy
மார் 01, 2025 17:00

why trump come down only beggers


Srinivasan Krishnamoorthy
மார் 01, 2025 17:02

he has gone to give rare minerals deal, there will be delay one day he had to return American loans,tl trump will not give anything free


பேசும் தமிழன்
மார் 01, 2025 18:33

என்னது... டிரம்ப் இறங்கி வரணுமா..... விளங்கும்.... ஒரு கோமாளி நடிகரை நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்ததன் பலனை...... உக்ரைன் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை