உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்

எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ''எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்'' என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டி உள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக சண்டை நடக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். 'அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்' என்று இஸ்ரேல் கூறுகிறது. ஈரானின் போர்டோ, இஸ்பஹான், நடான்ஸ் ஆகிய 3 அணு சக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியதால், மேற்கு ஆசிய பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கவலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தண்டனை தொடர்கிறது. எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். எதிரி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்கு நேரம் வந்துவிட்டது. இப்போது அவர் தண்டிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Anand
ஜூன் 23, 2025 17:55

ஊர் என இருந்தால் ரவுடிகள் என சொல்லிக்கொண்டு சிலர் உடம்பு நோகாமல் ஊரை ஏமாற்றி பிழைத்துக்கொண்டிருப்பார்க, அதுபோல போல காஸாவிலும் ரவுடி கூட்டம் ஒன்று தங்கள் வயிற்று பிழைப்புக்காக அங்கிருந்த மக்களை மிரட்டி உருட்டி ஏதோ தங்கள் வாழ்க்கையே செவ்வனே நடத்திக்கொண்டிருந்தது. அவர்களை அழைத்து மூளை சலவை செய்து, ஹமாஸ் என பெயரையும் சூட்டி, உசுப்பேற்றி உசுப்பேற்றி கடேசியில் அந்த இடத்தையே சுடுகாடு ஆக்கிவிட்டு வேறு எவரும் கிடைக்கவில்லை என்று ஸ்பெஷல் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று தனக்கு தானே கல்லறையை அமைத்துக்கொண்டிருக்கிறான் இந்த கமேனி.


Ramesh Sargam
ஜூன் 23, 2025 14:29

எதிரி அடுத்த தவறும் செய்யப்போகிறான். அது உன் தலையில் குண்டுபோடுவது.


Svs Yaadum oore
ஜூன் 23, 2025 14:18

சங்கிகளெல்லாம் ஏன் யூதர்களுக்கு சப்போர்ட் பன்றாங்கனு புரியலயாம் ..விடியல் திராவிடனுங்க எதுக்கு சமூக நீதி மத சார்பின்மையாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவு கொடுக்கனும்?? ...அதுக்கு காரணம் என்ன?? .. ..பங்களாதேஷி ஹிந்துக்கள் அங்கு யாரால் படுகொலை செய்யப்பட்டார்கள் ??...பங்களாதேஷி ஹிந்துக்கள் பெரும்பாலும் தலித் இனத்தவர்தான் .. அதுக்கு மட்டும் விடியல் வாய் திறப்பதில்லையே ...அதுக்கு காரணம் என்ன ??...


Svs Yaadum oore
ஜூன் 23, 2025 13:01

ஈரானில் வாழும் முன்பு பெர்சியா Zoroastriani மதம் பிரிவினர் இப்போது அங்கு வெறும் 30000 நபர்கள் ....இந்தியாவில் வாழும் பார்சி இனத்தவர் 60000 நபர்கள் ....இந்தியாவை விட ஈரானில் குறைவு ....பெர்சியா முழுக்க கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டார்கள் .....பிறகு இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்கள் அரச சபை பேசும் மொழியும் பெர்சியன் ...இப்படிப்பட்ட அழிக்கும் வரலாறு கொண்டவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் தான் இங்குள்ள விடியல் திராவிடனுங்க .....அதற்கு காரணம் சமூக நீதி மதச்சார்பின்மையாம் ....இந்த திராவிடனுங்க ஈரான் சென்றால் அவர்கள் கால் தூசுக்கு கூட இந்த திராவிடனுங்களை மதிக்க மாட்டார்கள் ...ஆனால் திராவிடனுங்க எப்போதும் சமுகே நீதிக்காக வெட்கம் மானம் பார்க்க மாட்டார்கள் ..


என்னத்த சொல்ல
ஜூன் 23, 2025 14:53

நீ உருட்டு ராசா... காசா பணமா?


ஈசன்
ஜூன் 23, 2025 12:50

அமெரிக்கா இரண்டு வாரம் கெடு கொடுத்துவிட்டு இரண்டு நாட்களுக்குள் குண்டு வீசியது. எதிரி பெரிய தவறு செய்துவிட்டது என்று புலம்புகிறார். ஏன் நீயும் தான் அமெரிக்கா மீது குண்டு போடு யார் வேண்டாம் என்று சொன்னது. குண்டு போடு. போட்டுதான் பாரேன்...


Svs Yaadum oore
ஜூன் 23, 2025 12:41

ஈரான் அரபி இனம் கூட கிடையாது .. அவர்கள் தாய் மொழியும் அரபி கிடையாது ....இரானியர் பேசும் மொழி பெர்சியன் ...மேலும் இவர்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் .....இவர்கள் பழங்குடி மதம் Zoroastrianism ...கட்டாய மதம் மாற்ற கொடுமையின் பிடியில் தப்பி பிழைத்து இடம் பெயர்ந்த போது இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வைத்தது குஜராத் கடலோர பகுதி ஹிந்து மன்னர் ....அவர்கள்தான் இப்போதும் இங்கு வாழும் பார்சி இனத்தவர் ....டாடா நிறுவனம் பார்சி இனத்தவர் சொந்தமானது ...அடுத்தவனை எப்போதும் வாழ வைப்பது பாரத கலாச்சாரம் ..


என்னத்த சொல்ல
ஜூன் 23, 2025 12:25

சங்கிகளெல்லாம் ஏன் யூதர்களுக்கு சப்போர்ட் பன்றாங்கனு புரியல... இந்திய ரூபாயை மதித்து வணிகத்திற்கு ஏற்றுக்கொண்ட ஒரே நாடு ஈரான் தான்.


ஈசன்
ஜூன் 23, 2025 12:45

நாளை பாகிஸ்தான் இந்திய ரூபாயை ஏற்று கொள்கிறது என்றால் அவர்களை நட்பு நாடாக ஏற்று கொள்ள முடியுமா. ஈரான் தீவிரவாதிகளுக்கு துணை போகிற நாடு. சொங்கிகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது. என்னத்த சொல்ல..


Svs Yaadum oore
ஜூன் 23, 2025 13:06

காரணம் கடந்த வரலாறு தான் ...மொகலாய மன்னர்கள் மந்திரிகள் எங்கிருந்து வந்தார்கள்?? ....இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருக்கவே கூடாது என்றால் நாளைக்கு இந்தியாவுக்கும் அதே கதிதான் ..அடுத்தவன் வாழ கூடாது என்பதே அப்ரஹாமிய மதங்கள் ..


Madras Madra
ஜூன் 23, 2025 12:09

நீ என்ன பெரிய கடவுளா ? தவறு செஞ்சிட்டான் தண்டனை குடுப்பேன்ன்னு குரைக்கிற அவன் உன் ராணுவ அணு ஆயுத கட்டமைப்பை தான் தாக்குறான் நீ கோழை மாதிரி பொது மக்களை தாக்குற நீதான் தவறு செஞ்சிட்டு இருக்குற உனக்கு தகுந்த தண்டனையை இஸ்ரேல் கொடுக்கும் .


Raja k
ஜூன் 23, 2025 11:48

உங்களை மாறி ஆட்கள் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஈரான் மக்களை பலிகடா ஆக்குறீர்கள், கமாசு, இசுபுல்லானு நிறைய தீவிரவாத குழுக்களை உலகிற்கு எதிராக ஏவி விடுகுறீர்கள், மதம் என்ற பெயரில் அதற்குள் சியா, சன்னினு பிரிவை உண்டுபன்னி உங்க மத ஆட்களையே அழிக்கும் நீங்கள் மதகுருவா? உங்களை போன்ற ஆட்கள் முதலில் அதிகார பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும், மத்திய கிழக்கில் அனைத்து நாடுகளுமே சிறிய நாடுகள்தான் அப்படி இருக்கையில் உங்களுக்கு மட்டும் எதுக்கு அணு ஆயுதம், தீவிரவாத அமைப்புகளை வளர்த்து உலகிற்கு எதிராக திரும்பும் உங்களை போன்ற நாடுகளுக்கு எதுக்கு அணுஆயுதம்? எனவே உங்கள் கொடூர பற்கள் பிடுங்கபட வேண்டும், அடுத்து உங்கள் அண்டை நாட்டுக்கும் இதே கதி விரைவில் வரும்


Ganapathy
ஜூன் 23, 2025 11:21

நீ என்ன கூவுனாலும் மொஸாத்தால் மொத்தப்பட்டு உலகில் எங்கு பதுங்கினாலும் நாஸிகளுக்கு ஆனதுபோல நீயும் உனது பாதுகாவலர்களும் துரத்தப்பட்டு கொலை செய்யப்படுவது திண்ணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை