ஏகாதச ருத்ர பாராயணம்
புதுடில்லி : ஷாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில், காலை கணபதி பூஜையுடன், அருண் சாஸ்திரிகள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், ருத்ராபிஷேகம், ஏகாதச ருத்ர ஜபம், ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, ஸ்ரீ ருத்ர நாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைப்பெற்றன. ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று 11 ஆவர்த்தி ருத்ர பாராயணம் செய்தனர். தொடர்ந்து, புனித நீரால் ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்