உள்ளூர் செய்திகள்

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

புதுடில்லி : சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில், ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை (ஆக.4) முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தின் நடுவே ராஜ அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்