உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / 3ம் வகுப்பு மாணவி எழுதிய புத்தகம்

3ம் வகுப்பு மாணவி எழுதிய புத்தகம்

இன்றைய தலைமுறை பலரும் படிக்க, எழுத சிரமப்படும் நிலையில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஆங்கிலத்தில் புத்தகத்தை எழுதி வெளியிட்டு உள்ளார். இதை படிக்கும் போது, ஆச்சரியம் ஏற்பட்டு இருக்கும். இந்த ஆச்சரியத்தை அதிகப்படுத்தும் தகவல்களின் தொகுப்பே இது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் ஜைரா ஆனந்த், 8. இவர், மங்களூரில் உள்ள தி யெனெபோயா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஜைரா மற்ற மாணவர்களை போல இல்லாமல், துவக்கத்தில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்குகிறார். இவருக்கு, வாசிப்பு பழக்கத்தில் அதீத ஈடுபாடு இருந்தது. அது போல, தனது 'ரப் நோட்டில்' ஏதாவது கதைகள் எழுதும் பழக்கத்தையும் வைத்து இருந்தார். பரிசு இதை பார்த்த அவரது ஆசிரியர்கள், ஜைராவை கதைகள் எழுத ஊக்கப்படுத்தினர். இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, பள்ளியில் நடந்த சிறுகதை போட்டிகளில், பங்கேற்று பரிசு பெற்று உள்ளார். இது, ஜைராவுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், சில கதைகள் எழுத துவங்கினார். இந்த கதைகள் அனைத்தும் சிறுவர், சிறுமியரின் ஆசைகளின் வெளிப்பாடாகவே இருந்தது. உதாரணமாக, சூப்பர் பவர் கிடைத்தால் என்ன செய்வது, வீட்டு பாடம் இல்லாத பள்ளிக்கூடம் போன்ற சிறார்களின் ஆசைகளின் பிரதிபலிப்பாக இருந்தது. கற்பனை திறன் இதனிடயை மாணவி ஜைரா, 'ரினி அண்ட் தி விஷிங் ஸ்டார்' எனும் தலைப்பில் புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம், கற்பனை உலகில் நடக்கும் மாயாஜால கதைகள் குறித்தது. ரினி எனும் இளம்பெண்ணின் வாழ்வில் நடக்கும் சுவாரசியங்களை கூறுகிறது. இந்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனால், ஜைராவின் பள்ளி, பெற்றோர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து, ஜைராவின் பள்ளி நிர்வாகம் கூறியதாவது: ஜைராவுக்கு அதீத கற்பனை திறன் உண்டு. ஜைராவுக்கு கதைகள் எழுத, படிக்க இரண்டும் பிடிக்கும். அவரது கற்பனை திறனை வைத்து, புத்தகம் எழுதியது பெருமையாக உள்ளது. அவரது புத்தகத்தை பள்ளியில் படிக்கும் சக மாணவர்களும் வாங்கி வருகின்றனர். அவர் மேலும் பல புத்தகங்களை எழுதுவார். அடுத்த புத்தகத்தை எழுதவும் துவங்கி விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர். மூன்றாம் வகுப்பு மாணவியால் முடியும் என்றால், நம்மாலும் முடியும். எந்த ஒரு விஷயத்திலும் செய்ய மனமும், கடின உழைப்பும் இருந்தால், வெற்றி நம் கையில் என்பதை மறக்க வேண்டாம் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ