உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  கேம் ஆன் 1,2,3...

 கேம் ஆன் 1,2,3...

- நமது நிருபர் -: தங்கமகள் பெங்களூரில் நடந்த மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் 400 மற்றும் 200 மீட்டர் போட்டிகளில், பசவனகுடி நீச்சல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மீனாட்சி மேனன் இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று அசத்தினார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மிரட்டிய ஷீத்தல் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும், 15 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகளுக்காக நடத்தும், 30 ஓவர் கிரிக்கெட் தொடரின், காலிறுதி போட்டியில் ஹாமண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் -நெப்டியூன் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. இதில், ஹாமண்ட்ஸ்அணியின் விக்கெட் கீப்பர் ஷீத்தல் சந்தோஷ் 184 ரன்கள் அடித்தார். இவரின் அபார ஆட்டத்தால் ஹாமண்ட்ஸ் அணி, 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இருவர் தேர்வு கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தவுள்ள, 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி - 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 23ம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் மங்களூரு மண்டல அணிக்கு விளையாடுவதற்காக பெலகாவியை சேர்ந்த வைஷ்ணவி, அன்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ