உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ஜூன் 20 முதல், ஜூலை 12 வரை கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா டிராபி

ஜூன் 20 முதல், ஜூலை 12 வரை கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா டிராபி

- நமது நிருபர் -: கே.எஸ்.சி.ஏ.,வின் மஹாராஜா டிராபி, வரும், 20ம் தேதி முதல், ஜூலை, 12ம் தேதி வரை நடக்கிறது. ஆறு அணிகள் போட்டியிடுகின்றன. கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் மஹாராஜா டிராபி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு போட்டி குறித்து, கே.எஸ்.சி.ஏ., செய்தி தொடர்பாளர் வினய் மிருதுஞ்செயா கூறியதாவது: மஹாராஜா டிராபி, வரும், 20ம் தேதி முதல், ஜூலை 12ம் தேதி வரை நடக்கிறது. கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், குல்பர்கா மிஸ்டிக்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஷிவமொக்கா யோதாஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு ஆகிய ஆறு அணிகள் மோதுகின்றன. மைசூரில், 20ம் தேதி முதல், 26ம் தேதி வரை; ஹூப்பள்ளியில் ஜூன் 27 முதல், ஜூலை 3 வரை; ஜூலை 5 முதல், 12ம் தேதி வரை பெங்களூரிலும் நடக்கிறது. மைசூரு, ஹூப்பள்ளியில் தலா 12 போட்டிகளும், பெங்களூரில் இரண்டு தகுதி சுற்றும், வெளியேற்றம் மற்றும் இறுதி போட்டி என 10 போட்டிகளும் நடக்கும். இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம், இன்று காலை 9:00 முதல், மதியம் 1:00 மணி வரை பெங்களூரில் நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெறவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். -------------- படவிளக்கம் 5_Article_0003 மஹாராஜா டிராபி கர்நாடக கிரிக்கெட் ரசிகர்களுக்கு தரமான கிரிக்கெட்டை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் நடக்கிறது. கேசவா, தலைவர், கவர்னிங் கவுன்சில், மஹாராஜா டிராபி ... பாக்ஸ் ... போட்டி அட்டவணை அட்டவணை மைசூரில் நடக்கும் போட்டிகள் ஜூன் 20 : மதியம் 2:30 மணி: கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - குல்பர்கா மிஸ்டிக்; இரவு 7:00 மணி: ஷிவமொக்கா யோதாஸ் - மைசூரு வாரியர்ஸ் ஜூன் 21: மதியம் 2:30 மணி: கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு - ஹூப்பள்ளி டைகர்ஸ்; இரவு 7:00 மணி: கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - ஷிவமொக்கா. ஜூன் 22: மதியம் 2:30 மணி: மைசூரு வாரியர்ஸ் - ஹூப்பள்ளி டைகர்ஸ்; இரவு 7:00 மணி: குல்பர்கா மிஸ்டிக்ஸ் - கோஸ்டல் கிங்க்ஸ் மங்களூரு ஜூன் 23: மதியம் 2:30 மணி: குல்பர்கா மிஸ்டிக்ஸ் - ஷிவமொக்கா யோதாஸ்; இரவு 7:00 மணி: மைசூரு வின்னர்ஸ் - கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஜூன் 24: மதியம் 2:30 மணி: கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு - கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ்; இரவு 7:00 மணி: ஹூப்பள்ளி டைகர்ஸ் - ஷிவமொக்கா யோதாஸ் ஜூன் 25: மதியம் 2:30 மணி: கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு - மைசூரு வாரியர்ஸ்; இரவு 7:00 மணி: ஹூப்பள்ளி டைகர்ஸ் - குல்பர்கா மிஸ்டிக்ஸ் * ஹூப்பள்ளியில் நடக்கும் போட்டிகள் ஜூன் 27: மதியம் 2:30 மணி: ஷிவமொக்கா யோதாஸ் - கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ்; இரவு 7:00 மணி: மைசூரு வாரியர்ஸ் - குல்பர்கா மிஸ்டிக்ஸ் ஜூன் 28: இரவு 7:00 மணி: ஷிவமொக்கா யோதாஸ் - கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு ஜூன் 29: மதியம் 2:30 மணி: குல்பர்கா மிஸ்டிக்ஸ் - ஹூப்பள்ளி டைகர்ஸ்; இரவு 7:00 மணி: கல்யணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - கோஸ்டல் கிங்க்ஸ் மங்களூரு ஜூன் 30: மதியம் 2:30 மணி: ஷிவமொக்கா யோதாஸ் - குல்பர்கா மிஸ்டிக்ஸ்; இரவு 7:00 மணி: மைசூரு வாரியர்ஸ் - கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு ஜூலை 1: இரவு 7:00 மணி: கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - ஹூப்பள்ளி டைகர்ஸ் ஜூலை 2: மதியம் 2:30 மணி: ஹப்பள்ளி டைகர்ஸ் - மைசூரு வாரியர்ஸ்; இரவு 7:00 மணி: கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு - ஷிவமொக்கா யோதாஸ் ஜூலை 3: மதியம் 2:30 மணி: குல்பர்கா மிஸ்டிக்ஸ் - மைசூரு வாரியர்ஸ்; இரவு 7:00 மணி: ஹூப்பள்ளி டைகர்ஸ் - கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ். * பெங்களூரில் நடக்கும் போட்டிகள் ஜூலை 5: மதியம் 2:30 மணி: கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - மைசூரு வாரியர்ஸ்; இரவு 7:00 மணி: ஷிவமொக்கா யோதாஸ் - ஹூப்பள்ளி டைகர்ஸ் ஜூலை 6: மதியம் 2:30 மணி: ஹூப்பள்ளி டைகர்ஸ் - கோஸ்டல் கிங்க்ஸ் மங்களூரு: இரவு 7:00 மணி: குல்பர்கா மிஸ்டிக்ஸ் - கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ஜூலை 7: இரவு 7:00 மணி: மைசூரு வாரியர்ஸ் - ஷிவமொக்கா யோதாஸ் ஜூலை 8: இரவு 7:00 மணி: கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு - குல்பர்கா மிஸ்டிக்ஸ் ஜூலை 9: மதியம் 2:30 மணி: எலிமினேட்டர் போட்டி; இரவு 7:00 மணி: முதல் தகுதி சுற்று ஜூலை 10: இரவு 7:00 மணி; இரண்டாவது தகுதி சுற்று ஜூலை 12: இறுதி போட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !