உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / தாலுகா அளவிலான தசரா போட்டி: மைசூரில் இன்று முதல் துவக்கம்

தாலுகா அளவிலான தசரா போட்டி: மைசூரில் இன்று முதல் துவக்கம்

மைசூரு: மாவட்ட பஞ்சாயத்து மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத் துறை சார்பில், தாலுகா அளவிலான தசரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. மைசூரு தசரா ஆண்டுதோறும் மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட தாலுகாக்களில் தசரா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர் தசராவின்போது பரிசு வழங்கி கவுரவிக்கப்படுவர். அதுபோன்று இந்தாண்டும் தாலுகா அளவிலான தசரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. இந்த போட்டிகள், வரும் 7ம் தேதி வரை நடத்தப்படுகின்றன. ஆண்களுக்கு, 100, 200, 400, 800, 1,500, 5,000, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 110 மீ., தடை ஓட்டப்பந்தயம், 400 மீட்டர், 1,600 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்கள் நடக்கின்றன. பெண்களுக்கு 100, 200, 400, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயம், 400, 1,600 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்கள் நடக்கின்றன. இவை தவிர, வாலிபால், கால்பந்து, கோ கோ, கபடி, த்ரோபால் போட்டிகளுடன், யோகாசன போட்டிகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி