உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  உலக டென்னிஸ் லீக் போட்டி டிச., 17ல் துவக்கம்

 உலக டென்னிஸ் லீக் போட்டி டிச., 17ல் துவக்கம்

பெங்களூரு: உலக டென்னிஸ் லீக் போட்டிகள், இந்தியாவில் பெங்களூரில் அடுத்த மாதம் 17ம் தேதி முதல் 20 ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடக்கின்றன. கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கத்திற்கு சொந்தமான, பெங்களூரில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிகளில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியன் டேனியல் மெட்வடேவ், முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபாகினா, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், பிரெஞ்சு நட்சத்திரம் கேல் மோன்பில்ஸ், சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் ரோஹன் போப்பண்ணா, அங்கிதா ரெய்னா, சுமித் நாகல், ஸ்ரீவள்ளி ராஷ்மிகா பாமிடிபதி உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர். நான்கு அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் இப்போட்டிகளில் விளையாடும். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் பிரிவுகள் இடம்பெறும். ரவுண்ட் ராபினுக்கு பின், முதல் இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை