| ADDED : டிச 28, 2025 10:17 AM
கொங்கு மண்டலத்தின் சுவை மிகுந்த உணவு வகைகள் தனி மகுடம் படைத்தவை. அந்த மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக, அவிநாசி ஹரிபவனம் இடம் பெற்றுள்ளது. அவிநாசி, திருப்பூர் ரோடு, பைபாஸ் பாலம் சந்திக்கும் இடத்தில் சுவையும், நவீன வசதிகளும் ஒருங்கே இணைந்த இடமாக உள்ளது. தரமான அசைவ உணவுகளுக்குப் குறிப்பாக சீரக சம்பா அரிசியில் தயாராகும், பிரியாணி வகைகள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வகைகள், சீரக சம்பா அரிசியின் மணம் மற்றும் மென்மையான இறைச்சியுடன் நாவிற்கு விருந்தளிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்காக பக்கெட் பிரியாணி வசதி உள்ளது. நாட்டுக்கோழி வறுவல், மட்டன் சுக்கா மற்றும் மீன் வறுவல் போன்ற கொங்கு நாட்டுக்கே உரிய காரசாரமான அசைவ உணவுகள் இங்கு பிரபலம். விசாலமான கார் பார்க்கிங், குடும்பத்துடன் உணவருந்த வசதியாக இருக்கைகள் மற்றும் துாய்மையான சூழல் பராமரிக்கப்படுகிறது. உட்புறம் அலங்கார வடிவமைப்பு ஒரு மகிழ்ச்சியான சூழலை வழங்குகிறது. ஊழியர்களின் கனிவான உபசரிப்பு மற்றும் விரைவான சேவை வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களும், காலை 11:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை சேவை வழங்கப்படுகிறது. சுவை மற்றும் தரத்துக்கு முக்கியத்துவம் தரும் உணவுப் பிரியர்களுக்கு, அவிநாசி ஹரிபவனம் ஒரு சிறந்த தேர்வு. மேலும் விவரங்களுக்கு 77089 10002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.