மேலும் செய்திகள்
நாவிற்கு சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல்
11-Apr-2026
- நமது நிருபர் -: காரக்குழம்பு செய்யும் போது அதிகம் தண்ணீர் சேர்த்து விட்டால், ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பை வறுத்து அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகும். ரவை உப்புமா செய்யும் போது, கடலைப்பருப்பு நிறைய சேர்த்து தாளித்தால் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அரிசி கழுவிய நீரில் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும். தக்காளி தொக்கு செய்யும் போது, இறுதியாக கொத்துமல்லி இலைகள் தூவினால் தொக்கு வாசனையாக இருக்கும். குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்தால், பாகு உறையாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும். அதே சமயம் பாகின் சுவையும் கூடும். உளுந்து வடை செய்யும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி தழையை சேர்த்து மாவில் அரைத்தால், வடை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். பிளாஸ்டிக் பையில் பழுக்காத தக்காளி பழங்களுடன், ஒரு பழுத்த தக்காளி பழத்தை போட்டு வைத்தால் அனைத்து தக்காளிகளும் விரைவில் பழுத்து விடும். மசால் வடைக்கு மாவு அரைக்கும் போது நறுக்கிய கீரை, கோஸ், வாழைப்பூ, போன்றவற்றை சேர்த்தால் சுவை கூடும். உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். முட்டைக்கோஸை வதக்கும் போது, சிறிது பால் சேர்த்து வதக்கினால், பொரியல் சுவையாக இருக்கும். ஆப்பாயில் செய்யும் போது முட்டை சரியாக வரவில்லை என்றால், அதை முட்டை பொடி மாஸாக மாற்றிவிடலாம்.
11-Apr-2026