வீட்டிலேயே செய்யலாம் சுவையான பிஸ்கட்
சிறார்கள் தினமும் சுவையான தின்பண்டங்களை சாப்பிட விரும்புவர். குறிப்பாக பிஸ்கட், குக்கீஸ்களை அதிகம் விரும்புவர். கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், தரமாக இருப்பதில்லை. இது பற்றி அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி, அம்மாக்களை பீதியடைய செய்கின்றன.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிஸ்கட்டுகளை கடையில்தான் வாங்க வேண்டுமா. வீட்டிலும் சுவையான பிஸ்கட் செய்யலாமே. தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப் ஏலக்காய் துாள் - கால் ஸ்பூன் ஜாதிக்காய் துாள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை சர்க்கரை - ஒரு கப் பால் - நான்கு ஸ்பூன் செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய் துாள், ஜாதிக்காய் துாள் சேர்த்து கலந்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் நெய், சர்க்கரை சேர்த்து கலக்கி, கோதுமை மாவில் சேர்க்கவும். அதன்பின் பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.இந்த கலவையை டிரேவில் கொட்டி பரப்பி விடவும். முள் கரண்டியை வைத்து மாவு கலவையில், ஆங்காங்கே லேசாக குத்தி விடவும். அதன்பின் வட்ட வடிவமாக வெட்டவும். இதனை பேக்கிங் டிரேவில் வைத்து, மைக்ரோ ஓவனில் வைத்து 20 நிமிடங்கள் பேக் செய்தால். சுவையான மொறு மொறு பிஸ்கட் தயார்.பிஸ்கட்டுகளை காற்று புகாத டப்பாவில் வைத்து கொண்டால், பல நாட்கள் கெடாமல் இருக்கும். குட்டீஸ்களும், வயதானவர்களும் விரும்பி சாப்பிடுவர். - நமது நிருபர் -