உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தோசை

நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தோசை

ஊட்டச்சத்து அடங்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து, அடை தோசை தயாரிப்பதை இந்த வாரம் பார்க்கலாம்.

செய்முறை:

 இட்லி பாத்திரத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை, 10 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் சேர்த்து பிசைய வேண்டும். இதில் சிறிதளவு உப்பு, வீட்டில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் சேர்த்து பிசையவும். சிறிதளவு சீரகம், மிளகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பிசைந்தால், அடை தோசை செய்வதற்கான மாவு தயாராகிவிடும். தோசைக்கல்லை சூடேற்றி, பிசைந்து வைத்துள்ள மாவை, அடையாக தட்டி போட வேண்டும். இருபுறமும் எண்ணெய் ஊற்றி, வேகவைத்து எடுத்தால் போதும். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தோசை தயார்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேடுகள், கலோரிகள், புரதம், கொழுப்பு, சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, இரும்பு என பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளது. இதை உட்கொள்வதால், உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அதிக நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடும்போது, மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன், செரிமான பிரச்னையையும் தீர்க்கிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி