உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / உயர் தர உணவக ருசியில் எக் சில்லி வறுவல்

உயர் தர உணவக ருசியில் எக் சில்லி வறுவல்

வீட்டிலேயே உயர்தர உணவகத்தில் சாப்பிடும் அளவுக்கு ருசியான எக் சில்லி வறுலை எப்படி செய்வது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. செய்முறை முதலில் நான்கு முட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டைகளின் தோல்களை நீக்கிவிட்டு, முட்டைகளை நீள வாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகு துாள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில், ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இதில், அவித்து வைத்த முட்டை துண்டுகளை போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டை துண்டுகளை வாணலியில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, வேறு வாணலியில் சூடான எண்ணெயில் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடை மிளகாய் என அனைத்தையும் போட வேண்டும். லேசாக கிளற வேண்டும். இதில் ஒரு கிளாஸ் தண்ணீரை சேர்க்க வேண்டும். இதில், உப்பு, மிளகு துாள், தக்காளி சாஸ், வினிகர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில், பொரித்த முட்டை துண்டுகளை போட வேண்டும். ஐந்து நிமிடங்கள் வதக்கிய பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். இந்த 'எக் சில்லி வறுவலை' மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். இதை சூடாக சாப்பிடும் போது சுவையாக இருக்கும். உயர் தர உணவகங்களில் சாப்பிடும் சுவையை நிச்சயம் தரும். வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் செய்து கொடுக்க சொல்லுவர் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை