உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / குழந்தைகளுக்காக ஜவ்வரிசி ரசமலாய்

குழந்தைகளுக்காக ஜவ்வரிசி ரசமலாய்

- நமது நிருபர் - குழந்தைகள் வீட்டில் உள்ளனரா... கடையில் இருந்து ஸ்நாக்ஸ் வாங்கி தரும்படி அடம் பிடிக்கின்றனரா... கடையில் வாங்கி கொடுப்பதை விட வீட்டிலேயே ஏதாவது செய்து கொடுக்கலாம் என நினைத்தால், ஜவ்வரிசி ரசமலாய் செய்து கொடுக்கலாமே...

தேவையான பொருட்கள்

l ஒரு கப் ஜவ்வரிசி l நான்கு டீஸ்பூன் பால் பவுடர் l அரை கப் சர்க்கரை l ஒரு லிட்டர் பால் l அரை டீஸ்பூன் குங்குமப்பூ l ஒரு டீஸ்பூன் ஏலக்காய் துாள் l பாதாம், பிஸ்தா தேவையான அளவு

செய்முறை

மிக்ஸி ஜாரில் ஜவ்வரிசி, பால் பவுடர், சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, சின்ன, சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து அடி கனமான பாத்திரத்தை வைத்து, பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக்கொள்ளுங்கள். குங்குமப்பூ, ஏலக்காய் துாள் சேர்த்து, உருண்டைகளை வேகவிட வேண்டும். உருண்டை நன்கு வெந்ததும், நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து கலந்து இறக்க வேண்டும். அவ்வளவு தான்... சுவையான ஜவ்வரிசி ரசமலாய் ரெடி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை