உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி

 ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி

- நமது நிருபர் -: பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அலுவலகத்துக்கு செல்வோருக்கு மதிய உணவு என்ன செய்து தருவது என்று யோசித்து கொண்டிருந்தால், இம்முறை, ஊட்டச்சத்துகள் நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள்  பச்சை பயறு - 2 கப்  மிளகாய் - 2  சீரகம் - 2 டீஸ்பூன்  கோதுமை மாவு - 2கப்  உப்பு - சுவைக்கு ஏற்ப  தண்ணீர் - போதுமான அளவு செய்முறை  முதலில் பச்சை பயறில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.  ஊற வைத்த பச்சை பயறு, இரண்டு மிளகாய், 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். நைஸாக அரைத்த பின், ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.  பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சை பயறு கலவையை ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும். இறுதியாக தோசை கல்லை சூடேற்றி, தேய்த்து வைத்த மாவை சுட்டெடுத்தால் போதும். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ