உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் செய்வது எளிமை... சுவையோ அருமை!
- நமது நிருபர் -: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, 'உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ்' செய்து தரலாம். இதை செய்வது எளிமை. அதே சமயம் சுவையோ அருமை. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் l உருளைக்கிழங்கு 2 l சோள மாவு 3 டீஸ்பூன் l அரிசி மாவு 1 டீஸ்பூன் l மிளகாய் தூள் 1/2டீஸ்பூன் l கரம் மசாலா 1/4 டீஸ்பூன் l உப்பு தேவையான அளவு l எண்ணெய் தேவையான அளவு செய்முறை முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்னர் கட்டிகள் இல்லாமல் நன்கு மசித்து கொள்ளவும். இதில், சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும். இந்த மாவை பெரிய தட்டில் போட்டு, பீட்சா போன்று வட்ட வடிவில் மாவை பரப்ப வேண்டும். பின், நீளமான ஸ்டிக் வடிவில் கத்தியால் வெட்டி கொள்ளவும். இதை கைகளால் உருட்டி, சிறிய அளவிலான ஸ்டிக் போன்று ரெடி செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெட்டி வைத்துள்ள ஸ்டிக்ஸ்களை, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதை தக்காளி சாசுடன் தொட்டு சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும்.