உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / உடல் ஆரோக்கியத்துக்கு பூசணிக்காய் பிரெட்

உடல் ஆரோக்கியத்துக்கு பூசணிக்காய் பிரெட்

குழந்தைகளுக்கு காலை நேர உணவாக பிரெட் ஜாம், பிரெட் ரோஸ்ட், பிரெட் ஆம்லேட், பிரெட் பட்டர் என பல உணவுகள் செய்து தருகிறோம். அதுபோன்று உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில், கோதுமை மாவில் சுவையான, ஆரோக்கம் நிறைந்த பூசணிக்காய் பிரெட் செய்யலாம். செய்முறை  மஞ்சள் பூசணிக்காயை வேக வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.  பின், ஒன்றரை கப் அளவிற்கு எடுத்து வைத்துள்ள சர்க்கரையை நன்றாக அரைத்து, பவுடராக்கிக் கொள்ளவும்.  ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பூசணிக்காய் கலவை, பவுடராக்கிய சர்க்கரை, ஒன்றரை கப் அளவிற்கு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  இந்த கலவையுடன் சலித்து வைத்துள்ள கோதுமை மாவு ஒன்றரை கப், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கவும்.  இதனுடன் பாதாம் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் சிறிதளவு வினிகர் கலக்கவும்.  இறுதியாக இந்த கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி ஒன்றரை மணி நேரம் குக்கரில் வைத்து பேக்கிங் செய்து எடுத்தால் போதும். சுவையான, ஆரோக்கியமான பூசணிக்காய் பிரெட் ரெடி. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை