மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கான முட்டை பிரெட் ஸ்நாக்ஸ்
09-Aug-2025
காரைக்குடி உணவு என்றால், ஆந்திராவுக்கு நிகரான காரத்துக்கு பஞ்சம் இருக்காது. சைவம், அசைவம் உணவு வகைகளின் ருசி வேற லெவலில் இருக்கும். செய்முறை முதலில், இறாலில் உள்ள நரம்புகளை நீக்கி, நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் சோம்பு, மிளகு, சீரகம், மிளகாய் வத்தல், கொத்தமல்லி போன்றவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். நன்கு அரைக்க முடியவில்லையென்றால், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது இறால் மசாலா செய்வதற்கான மசாலா ரெடி. இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து குறைவான வெப்பத்தில் ஒரு 10 நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக இறாலை சேர்த்து ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வதக்கி எடுத்தால் போதும். சுவையான காரைக்குடி ஸ்பெஷல் இறால் கிரேவி ரெடி - நமது நிருபர் - .
09-Aug-2025