லெமன் பட்டர் குக்கீஸ் செய்வோமா?
மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு வரும் குட்டீஸ்கள், சாப்பிட தின்பண்டம் கேட்டு அடம் பிடிப்பது, அனைவரின் வீட்டில் நடக்கும் நிகழ்வு. இவர்களுக்கு லெமன் பட்டர் குக்கீஸ் செய்து தரலாம். செய்முறை ஒரு கிண்ணத்தில், உப்பு, சர்க்கரை, வெண்ணெய், எலுமிச்சை ரசத்தை சேர்த்து, நன்றாக பிசையவும். இதில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும். கட்டிகள் இருக்கக் கூடாது. இந்த கலவையில் மைதா, பேக்கிங் பவுடர் போட்டு பிசையுங்கள். இந்த கலவையை பேக்கிங் பவுடரில் சுற்றி, ஒரு மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும். அதன்பின் அதை வெளியே எடுத்து, ட்ரேவில் பரப்பி வட்ட, வட்டாக வெட்டி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில், எட்டு முதல் 10 நிமிடம் வைத்திருந்தால், சுவையான லெமன் பட்டர் குக்கீஸ் தயார். குக்கீஸ் மீது, சர்க்கரையை பொடியாக்கி துாவி பரிமாறலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இந்த குக்கீஸ் மாறுபட்ட சுவையுடன் இருக்கும். - நமது நிருபர் -