மேலும் செய்திகள்
சமையல் மணக்க டிப்ஸ்
04-Apr-2026
சமையல் மணக்க 'டிப்ஸ்' - நமது நிருபர் - * ஆம்லெட் போட கிண்ணத்தில் முட்டையை கலக்கும் போது, அதனுடன் சிறிதளவு வெண்ணெய் அல்லது, சில துளி பால் சேர்த்து கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும். * பாகற்காய் காரக்கறி செய்யும் போது, கடலை பருப்பை வேகவைத்து மசித்து, பாகற்காய் காரக்கறியுடன் சேர்த்து கிளறி இறக்கினால் ருசியாக இருக்கும். * தக்காளி தொக்கு செய்யும் போது, சிறிதளவு சிக்கன், 65 மசாலா சேர்த்தால், தொக்கின் சுவை வித்தியாசமாக இருக்கும். * முட்டை கோஸ் வதக்கும் போது, கொஞ்சமாக பால் சேர்த்து வதக்கினால், பொரியல் வெள்ளை நிறத்தில் பளிச்சென இருக்கும். * வடை மாவில் பொடிசாக நறுக்கிய கீரை, முட்டை கோஸ், வாழை பூ சேர்த்தால் சுவை கூடும்.
04-Apr-2026