உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  காகிதங்களை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்யும் ஆனந்த்

 காகிதங்களை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்யும் ஆனந்த்

- நமது நிருபர் -: பெலகாவி சமர்த் நகரை சேர்ந்தவர் ஆனந்த் கோகித்கர், 49. இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். 2020ம் ஆண்டில் விளையாட்டாக விநாயகர் சிலைகளை செய்தார். களிமண், பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தாமல் காகித அட்டைகளை கூழாக்கி, அதன் மூலம் சிலைகள் செய்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அசந்தனர். இதனால், சந்தோஷமடைந்த அவர், விநாயகர் சிலைகளை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளித்தனர். அதன் பேரில், 2021ம் ஆண்டு முதல் காகிதங்கள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்கிறார். ஒரு அடி முதல் 3 அடி உயரம் கொண்ட சிலைகளை விற்கிறார். 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து உள்ளார். இந்த ஆண்டு, 13 சிலைகள் செய்தார். இதுமட்டுமின்றி, வாடிக்கைளாயர்கள் கேட்கும் டிசைனிலும் சிலைகள் செய்கிறார். இது குறித்து, அவர் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை செய்ய முடிவு எடுத்தேன். எனது பிரின்டிங் பிரசில் வீணாகப்போகும் காகிதங்களை பயன்படுத்தி, சிலைகள் செய்ய துவங்கினேன். முதலில் சிரமமாக இருந்தது. தற்போது, பழகி விட்டது. ஒரு சிலை செய்வதற்கு ஒரு வாரம் ஆகிறது. சிலைகள் மீது பல வண்ணங்களில் வர்ணம் பூசுவேன். ஒரு சிலை செய்து முடித்த பிறகு, அதை பார்த்து ரசிக்கும் சுகமே தனி தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை