உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / அழகு / கை,கால் மூட்டுகள் கருமையாக இருக்கா?: எளிதாக நீக்கலாம்...!

கை,கால் மூட்டுகள் கருமையாக இருக்கா?: எளிதாக நீக்கலாம்...!

மாநிறம், சிவப்பாக இருப்பவர்களுக்கு கூட முழங்கை, கணுக்கால், விரல் மூட்டு, கால் மூட்டு உள்ளிட்ட வெளிப்புற பகுதிகளில் கருமையாக இருக்கும். இது கவலையை ஏற்படுத்தும். இதற்காக எவ்வளவு செலவு செய்து அகற்ற நினைத்தாலும் நிரந்த தீர்வு என்பது கேள்விக் குறியாகவே இருக்கும். இப்படி தோற்றத்தின் அழகை கெடுக்கும் வகையில் உள்ள கருமை நிறத்தை இயற்கை முறையில் நிரந்தரமாக நீக்க முடியும்.

டிப்ஸ்

எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து கருமை உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து ஊறவைத்து கழுவினால் கருமை மறையும். எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்து கருமை உள்ள இடத்தில் தடவி, ஊறவிட்டு 10நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் மறையும். வெள்ளரிக்காய் சாறு, வினிகர், மஞ்சள் தூள் மூன்றையும் கலந்து கருமை உள்ள இடங்களில் தேய்த்து ஊறவிட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் மறையும். தயிர் மூன்று தேக்கரண்டி எடுத்து, அதனுடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கருமை உள்ள இடத்தில் தடவி வரலாம். கடலை மாவு இரண்டு தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிறிதளவு, பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கருமை உள்ள இடத்தில் சிறிது நேரம் கழித்து நீரால் கழுவினால் மறையும். பெரிய வெங்காயம், பூண்டு இரண்டையும் சமஅளவில் அரைத்து கருமை உள்ள இடத்தில் தடவினால் மறையும். எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து கருமை உள்ள இடத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவினால் மறையும். வாரத்திற்கு இருமுறை இதை செய்யலாம். தேங்காய் எண்ணெயுடன் ஆவாரம்பூ சேர்த்து காய்ச்சி பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை கருமை உள்ள இடத்தில் தடவி வந்தால் கருமை மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ