உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / நிகழ்வுகள் / கோவையில் செப்.,24ல் பெண்களுக்கான சிறப்பு மாரத்தான்..!

கோவையில் செப்.,24ல் பெண்களுக்கான சிறப்பு மாரத்தான்..!

கோவையில் வரும் செப்.,24ம் தேதி, இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதானத்தில், 2வது ஆண்டாக 'பி.எஸ்.ஜி ஹார்டத்தான் 2023' என்ற பெயரில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. செப்.,24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு துவங்கும் போட்டியில் 3 கி.மீ.,7 கி.மீ.,மற்றும் 10 கி.மீ., என மூன்று பிரிவுகளாக மாரத்தான் நடத்தப்படுகிறது.மாரத்தானில் பங்கேற்க பதிவு கட்டணமாக 3.கி.மீ பிரிவுக்கு ரூ.300, 7 கி.மீ பிரிவுக்கு ரூ.750, 10 கி.மீ பிரிவுக்கு ரூ.900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாரத்தானில் வெற்றி பெறும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மொத்தம் ரூ.1.10 லட்சம் வரை ரொக்க பரிசாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும், டி - சர்ட், பதக்கம், சான்றிதழ், காலை உணவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 9894097730 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை