மேலும் செய்திகள்
அயர்ன் பண்ணாமல் அப்படியே போட்டுக்கலாம்!
28-Sep-2025
மேக்கப் இருக்கு... ஆனா இல்லை!
28-Sep-2025
60 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர் இந்தியா நிறுவனம், தனது விமான பணிப்பெண்களுக்கு சேலைக்கு பதிலாக சுடிதாரை புதிய யூனிபார்மாக மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த 2022ல் ஏர் இந்தியாவை கைப்பற்றிய டாடா குழுமம், அதனை விஸ்தாரா நிறுவனத்துடன் இணைத்தது. தொடர்ந்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 1962ம் ஆண்டு ஜே.ஆர்.டி டாடாவின் யோசனையில், வழக்கமான யூனிபார்முக்கு மாற்றாக சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, அவை பின்னி மில்லில் இருந்து தயாராகின.தற்போது வரை, ஏர் இந்தியாவில் பணியாற்றும் விமானப்பணி பெண்களின் யூனிபார்ம், அடர் சிவப்பு, நீலம் மற்றும் தங்க நிறத்திலான சேலை, தனித்துவமிக்க ஆடை அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நவீன காலத்திற்கு ஏற்ப, தற்போதைய புதிய யூனிபார்மை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார்.
28-Sep-2025
28-Sep-2025