உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / பேஷன் / வயிற்றை குறைக்குமா மெட்டர்னிட்டி பெல்ட்?

வயிற்றை குறைக்குமா மெட்டர்னிட்டி பெல்ட்?

போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் சிலர் முதலில் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். இல்லை என்றால் 'சைடு' வாக்கில் நிற்பார்கள். இவை எல்லாம் தொப்பையை மறைப்பதற்கான டெக்னிக். தளர்ந்த வயிறு, தோற்றப்பொலிவை குறைப்பதால், ஆண்கள், பெண்கள் இதை மறைக்க விரும்புவர். தொப்பை என்பது பெரும்பானால பெண்களுக்கு திருமணத்திற்கு பின் இலவச இணைப்பாக வந்து, ஒரு பேமிலி பேக்காக அமைந்துவிடுகிறது. குழந்தை பிறந்த பிறகு பெண்கள் பலருக்கு இந்த பிரச்னை வருவது வழக்கமாகிவிட்டது. அந்த காலத்தில் பிரசவமானதும் பெண்களுக்கு, நல்ல காட்டன் துணியை வைத்து இறுக்க வயிற்றை கட்டும் பழக்கம் இருந்தது. தற்போது மெட்டர்னிட்டி பெல்ட் அணிந்து கொள்ளும் வழக்கம் பரவலாகி வருகிறது. இது தளர்ந்த வயிற்றுப்பகுதி தசைகள் மற்றும் உறுப்புகளை தாங்கிப்பிடிக்கும் வண்ணம் போடப்படுகிறது. இதனால் அந்த தசைகள் இறுக்கமடைந்து தொப்பை வயிறை கொஞ்சம் உள்ளே தள்ள செய்கிறது. பெல்ட்டை எப்போது அணியலாம்?பெண்கள் பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் துணி கட்டுவது, பெல்ட் அணிவது மருத்துவரின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும். ஒருவேளை சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த நாளிலேயே வயிற்றை கட்டிக்கொள்ளலாம். சிசேரியன் முறையில் குழந்தை பிறந்திருந்தால், அந்த காயம் ஆறும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

பெல்ட அணிவதன் பயன்கள்:• குழந்தை பிறந்த பிறகு அந்த வயிற்றின் உள்ளே வெற்றிடம் ஏற்பட்டிருக்கும். பெல்ட் அணிவதுன் மூலம் முதலில் அந்த பகுதியில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கலாம். மேலும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் செய்யும். • பெல்ட் பெண்களில் உடற்கட்டை பராமரிக்க உதவுகிறது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் தளர்ந்த தசைகளை கொஞ்சம் கொஞ்சமாக இறுகச் செய்கிறது. • கருப்பை உட்பட வயிற்றிலுள்ள உறுப்புகளை மீண்டும் உள்ளே அமுக்கி பழைய நிலைக்கு இருக்க செய்யும் என்கிறார்கள். பெல்ட் அணிவதால் ஏற்படும் அசவுகரியங்கள்!• மிகவும் இறுக்கமாக பெல்ட் அணிவதால் கருப்பை அழுத்தப்பட்டு ரத்தப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. • பெல்ட் வயிற்றில் பட்டு உடலோடு உரசுவதால் அந்த இடங்களில் அரிப்பு ஏற்படக்கூடும்• நாள் முழுவதும் அணிந்து கொள்வதால் சில சமயம் வலியை ஏற்படுத்தும். • சிசேரியன் செய்தவர்களுக்கு உள்காயம் இருப்பதால், பெல்ட்டை அணிவது காயம் ஆறுவதில் பிரச்னைகளை உருவாக்கும்.• வெயில் காலங்களில் பெல்ட் அணிவதால் மிகவும் வியர்வை வந்து அரிப்பை தரும். அதனால் உங்கள் தேவை, அவசியதிற்கு ஏற்ப மெட்டனிட்டி பெல்ட் அணிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை