உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / கமகமக்கும் கப்சா செய்வது எப்படி? - சிக்கன் பிரியாணியின் அரேபிய வெர்ஷன்

கமகமக்கும் கப்சா செய்வது எப்படி? - சிக்கன் பிரியாணியின் அரேபிய வெர்ஷன்

அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப் பரீட்சயமான உணவு கப்சா. ஏமன், சவுதி, குவைத், பக்ரைன், கத்தார், யுஏஇ, ஓமன் ஆகிய நாடுகளில் இது தேசிய உணவாகவே கருதப்படுகிறது. சிக்கனுடன் அரிசி மற்றும் பிற மசாலாப் பொருட்களை சேர்த்து செய்யப்படும் உணவு தான் இந்த கப்சா. கபாசா என்ற அரபி சொல்லில் இருந்து கப்சா வந்தது. கபாசா என்றால் பிழிவது என பொருள்.

கப்சா செய்ய தேவையானப் பொருட்கள்:

கோழிக்கறி - அரை கிலோஅரிசி - 200 கிராம்வெங்காயம் - 2தக்காளி - 2 தக்காளி பேஸ்ட் - ஒரு ஸ்பூன்இஞ்சி பேஸ்ட் - அரை ஸ்பூன்மிளகு தூள் - அரை ஸ்பூன்பொடித்த ஏலக்காய் - அரை ஸ்பூன்பொடித்த லவங்கம் - அரை ஸ்பூன்காய்ந்த எலுமிச்சை - 1எண்ணெய் - 50 மிலிஉப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

5 லிட்டர் நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மீடியம் அளவில் சூடு படுத்தவும். பாத்திரம் காய்ந்ததும், 75 மில்லி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி விழுந்தையும் கலந்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பொன்னிறம் ஆனதும் சுத்தப்படுத்தி வைத்துள்ள அரை கிலோ கோழி கறியைப் போட்டு வேக வைக்கவும். பிரவுன் நிறமாக சிக்கன் மாறியதும், ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பெப்பர் தூள், அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, காய்ந்த எலுமிச்சை 1, அரை ஸ்பூன் லவங்கப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.மசாலாப் பொருட்கள் சேர்ந்ததும், ஒரு ஸ்பூன் தக்காளி பேஸ்ட், பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை போட்டு மீண்டும் நன்றாக கலந்துவிடவும். எண்ணெய் மேலே கொதித்து வருவது தெரிந்தால், ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, மீடியம் ஹை சூட்டில் 25 நிமிடம் சிக்கனை வேகவையுங்கள். வெந்ததும், பாத்திரத்தில் இருந்து சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்துக்கொள்ளுங்கள். 45 நிமிடம் அரிசி ஊறியிருக்க வேண்டும். அதனை கிளறி விட்டு, தீயை மீடியம் ஹையில் வைத்து, பாத்திரத்தின் மேல் ஒரு காட்டன் துண்டை வைத்து மூடி போட்டு அழுத்தி மூடவும். அது வேக 20 நிமிடம் ஆகும். அந்த சமயத்தில் தனியாக எடுத்து வைத்த சிக்கன் துண்டை பேக்கிங் பேனில் வைத்து, ஓவனில் மீடியம் ஹையில் ரோஸ்ட் செய்யுங்கள். 20 நிமிடத்தில் நீரெல்லாம் ஆவியாகி அரிசி மசாலாப் பொருட்களுடன் இணைந்து நன்றாக வெந்திருக்கும். தற்போது சாதத்துடன் சிக்கன் துண்டை வைத்து பரிமாறலாம். இதற்கு டாப்பிங் தேவை என்பவர்கள் வேக வைத்த பாதாமை இரண்டு துண்டுகளாக்கி அதனை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். உலர் திராட்சையையும் வறுத்துக்கொண்டு அதனை டாப்பிங்காக தூவினால், கமகமக்கும் கப்சா ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ