உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / தாமரை விதை (மக்கானா)கறி!

தாமரை விதை (மக்கானா)கறி!

சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையான கறி 'தாமரை விதை கறி' ஆகும். பன்னீர் பட்டர் மசாலா போலவே தாமரை விதை கறியும் ரொம்பவே சுவையாக இருக்கும். தாமரை விதைகளில் இருக்கக்கூடிய மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் சோடியமும் உள்ளன. இதனால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் காக்க உதவுகிறது. வாங்க செய்து பார்க்கலாம்.

தேவையானவை:

தாமரை விதைகள் - 50 கிராம்பெரிய வெங்காயம் - 3தக்காளி - 2சீரகம் - ஒரு ஸ்பூன்சோம்பு - ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,முந்திரி பருப்பு - 10பச்சை மிளகாய் - 2,இஞ்சி - ஒரு சிறு துண்டுபூண்டு - ஐந்து பற்கள்,ஏலக்காய் - 2பட்டை - 1கிராம்பு - 3உப்பு - தேவையானதுவெண்ணெய் - தேவையானதுகரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்நறுக்கிய மல்லி தழை - சிறிதளவுபிரஷ் கிரீம் - தேவையானது

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு கரைய விடுங்கள். அதில் 50 கிராம் அளவிற்கு தாமரை விதைகளை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுங்கள். பின்னர் வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மீண்டும் வெண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு போட்டு வதக்குங்கள்.வறுபட்டதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். 10 முந்திரி பருப்புகளை முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள். பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்கு மசிய வதக்கி விடுங்கள். இவை வதங்கி வரும் போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பின்பு இவற்றை ஆற விட்டு விடுங்கள். பின் மிக்ஸர் ஜாரில் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு வெண்ணெய் விட்டு கால் ஸ்பூன் அளவுக்கு கரம் மசாலா சேர்த்து லேசாக வதக்குங்கள்.பின் மீதம் இருக்கும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். இவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நீங்கள் வறுத்து வைத்துள்ள தாமரை விதைகளை சேர்த்து பிரட்டி விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து பிரஷ் கிரீம் மேலே ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரியுங்கள். அவ்வளவுதாங்க, சூப்பரான தாமரை விதை கறி ரெடி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை