உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / உடல் நலம் காக்க தேவை உடற்பயிற்சி

உடல் நலம் காக்க தேவை உடற்பயிற்சி

''உடல்நலம் காக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமானது,'' என, கோயம்புத்துார் அத்லெட்டிக் அசோசியேஷன் துணை தலைவர் ரமேஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நவ., 2018ல் எனது உடல் எடை, 103 கிலோவாக இருந்தது. தினமும், சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றுக்கு தலா, இரண்டு, மனஅழுத்தத்துக்கு ஒன்று என, ஏழு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. இதை மாற்ற நினைத்தேன். அதற்காக, 2020ம் ஆண்டு முதல் சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் ஜாகிங், எனக்கு கைகொடுத்தது. தொடர்ந்து, 600 நாட்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இன்று ஒரு மாத்திரை கூட எடுப்பதில்லை. உடல் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளது. இதுவரை, 42 கி.மீ., முழு மராத்தானில் ஒரு முறை, 27 கி.மீ., மராத்தானில் 35 முறை பங்கேற்றுள்ளேன். தினமும், 10 கி.மீ., ஓட்டம் மேற்கொள்கிறேன். உடல் முற்றிலும் பக்குவம் அடைந்துள்ளது. உடல்நலத்துக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. உண்ணும் உணவை செரிமானம் அடையச் செய்ய, உடற்பயிற்சியால் மட்டுமே முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை