எலும்பு மூட்டு பிரச்னைக்குத் தீர்வு கூறும் தட்டு வர்மம்..!
சித்த மருத்துவத்தில் வர்மக் கலை மிகப் பிரபலமான மருத்துவ முறைகளுள் ஒன்று. வர்மம் மூலமாக உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலமாக நோயை குணப்படுத்த, சித்த வைத்திய நிபுணர்கள் அந்த காலத்தில் பல வித வர்ம வித்தைகளை ஓலைகளில் எழுதிச் சென்றனர்.