உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / பெண்கள் தொப்பையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!

பெண்கள் தொப்பையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!

உடல் எடை அதிகரிப்பால் பலர் தோற்றம், உடல்நலப் பாதிப்பு போன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதிகரித்த உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிது அல்ல. நாம் நினைத்தால் எடையை குறைத்து விடவும் முடியாது. அதற்கு முதலில் மனதை தயார் படுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் முழு அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே உடல் எடையை குறைக்கலாம்.இளம்பெண்கள் பலர் எடை கூடி பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நமக்கு தெரிந்தது தான். உணவு பழக்க வழக்கம். எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பது அடுத்த காரணம். இது தவிர ஹார்மோன் கோளாறு, மரபுவழி போன்ற பிரச்னைகளும் உள்ளன.உடல் எடையை குறைக்கும் முயற்சிகளை எடுத்தாலும், இடுப்பு பகுதிகளில் உள்ள சதைகளை குறைப்பது என்பது பெரும் போராட்டமாக உள்ளது. கெட்ட கொழுப்பு முதலில் சேரும் இடம் இடுப்புப் பகுதியில் தான். இடுப்புத் தசைகளுக்கு வேலை கொடுக்காமல் விடுவதால் கொழுப்பு கரையாமல் சதையாக மாறுகிறது. இந்த இடுப்பு சதையை குறைக்க கலோரி குறைந்த உணவு மற்றும் ஒட்டுமொத்த உடற்பயிற்சியுடன் இடுப்பு பகுதிக்கான முறையான பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.

பயிற்சிகள்

நீங்கள் ஒரே நேரத்தில் இடுப்பு தசை மற்றும் கொழுப்பை கரைக்க விரும்பினால் ஒரு நாற்காலியில் உட்காருவது போன்று நின்று கொண்டு கையை நேராக நீட்டியபடி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு அரைமணி நேரம் செய்ய வேண்டும். இந்த பயிற்சி கொழுப்பை கரைத்து உடலின் ரத்த ஒட்டத்தை சீராக்கும். தரையில் விரிப்பை விரித்து மேல் பார்த்து படுத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி, வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். சில நிமிடம் அப்படியே படுக்க வேண்டும். பின்பு காலை நீட்டி விட்டு, வலது காலை மடக்க வேண்டும். இதேகபோல் 50 தடைவை செய்ய வேண்டும்.பின்னர் இயல்பு நிலைக்கு வந்த பின்பு இரண்டு காலையும் மடக்கியபடி இடது பக்கமாக சாய்ந்து படுத்து கொண்டு ஒவ்வொரு காலையும் மடக்கி நீட்ட வேண்டும். இப்படி தினந்தோறும் செய்வதால் இடுப்பு பகுதியில் தேவையற்ற கொழுப்பு சேறுவதை தடுக்கலாம்.

டிப்ஸ்

காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலும்பிச்சை சாறு அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் புத்துணர்வு அளிப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடம்பில் நச்சு சேர விடாமல் தடுக்கும். காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை விளக்கெண்ணைய் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடம்பில் வாயுக்களையும், கழிவுக்களையும் சேர விடாமல் தடுக்கும். தினமும் வெந்நீர் குடித்து வந்தால், உடம்பில் தேவையற்ற கழிவுகளை சேர விடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை