மேலும் செய்திகள்
குளிர்காலத்தில் கைகொடுக்கும் வீட்டுவைத்தியம்
15-Nov-2026
தேனில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
15-Nov-2026
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம்
14-Nov-2026
அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்பட 6 காரணங்கள்
31-Oct-2026
மகிழ்ச்சி, குதூகலம், ஆதங்கம், துக்கம், இயலாமை என பலவித மன உணர்ச்சிகளை வெளிப்படுத்த கண்களில் இருந்து வெளியாகும் கண்ணீர் ஓர் கருவியாக உள்ளது. மேற்கண்ட உணர்ச்சிகளை நாம் பெறும்போது நம்மையறியாமல் கண்ணீர் எவ்வாறு சுரக்கிறது என யாராவது சிந்தித்ததுண்டா? இதற்கு மருத்துவ அறிவியல் கூறும் விடையைப் பார்ப்போம். கண்களின் உள்மடிப்பின் மேல் பகுதியில் லாக்ரிமல் சுரப்பி அமைந்துள்ளது. இந்த சுரப்பி உப்பு படிந்த கண்ணீரை உருவாக்கும். கண்கள் வறட்சி அடையாமல் பாதுகாக்கவும், கண்களில் தூசு படாமல் தவிர்க்கவும் லாக்ரிமல் சுரப்பி கண்ணீரை அவ்வப்போது சுரக்கும். கண்ணீர் கண்களில் ஈரப்பதத்தை நீட்டிக்க உதவும். இதனுடன் மியூகோஸ் திரவம் மற்றும் எண்ணெய் போன்ற திரவமும் சுரந்து கண்களைப் பாதுகாக்கும். தூங்கி எழும்போது கண்களில் உள்ள நுண் தூசுகள் அனைத்தும் இந்த பாதுகாப்பு திரவங்களால் வடிகட்டப்பட்டு கண்களின் ஓரத்தில் தேங்கி இருப்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் நாம் நமது கண்களை சிமிட்டும்போது இந்த திரவங்கள் கண்கள்மீது படிந்து பாதுகாக்கின்றன. உணர்ச்சிவசப்பட்டால் மட்டுமே கண்ணீர் அதிகளவில் சுரக்கும் என்றில்லை. தூசு அதிகம் உள்ள இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் கண்களைப் பாதுகாக்க கண்ணீர் அதிகமாக சுரக்க இந்த சுரப்பிகளுக்கு மூளை உத்தரவிடும். இந்த உத்தரவின் பேரில் கண்ணீர் வெளியாகும்.
15-Nov-2026
15-Nov-2026
14-Nov-2026
31-Oct-2026