உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / -பெங்களூரில் குதுாகலிக்கும் படகு சவாரி

-பெங்களூரில் குதுாகலிக்கும் படகு சவாரி

பெங்களூரில் படகு சவாரி, குழந்தைகள் விரும்பும் பொம்மை ரயில் சவாரி என, இரண்டு முதல் மூன்று மணி நேரம் பொழுதை கழிக்க ஏற்ற இடம், லும்பினி கார்டன்.பெங்களூரு, நாகவாரா ஏரிக்கரையை ஒட்டி அமைந்து உள்ளது. பரபரப்பான நாட்களில் இருந்து விலகி, ஓய்வெடுக்க மிகவும் பொருத்தமான இடமாகும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் நகரின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.ஏரியை பார்த்தபடி இருக்கைகள், நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் அமர்ந்தவாறு ஏரியின் அழகையும், வீட்டில் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்கள் அல்லது கார்டனில் உள்ள உணவு கடையில் இருந்து உணவு வகைகளை வாங்கி வைத்து கொண்டு சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருக்கலாம்.இந்த பூங்கா, பசுமையாக காட்சி அளிப்பது மட்டுமின்றி, பொழுதுபோக்கு மற்றும் குடும்பத்தினருடன் வேடிக்கைக்காக வடிவமைக்கப்பட்டதாகும். பெங்களூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில், லும்பினி கார்டனும் ஒன்றாகும். நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளதால், நகரின் பல பகுதிகளில் இருந்து இங்கு வரலாம். இங்கு சுலபமாக சென்றடைய, பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

சிறப்புகள்

பூங்காவில் உள்ள தோட்டங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதால், பசுமையாக காட்சி அளிக்கும். புல்வெளிகள், மலர் செடிகளுக்கு நடுவில் நடைபாதை அமைந்துள்ளதுலும்பினி கார்டனின் முக்கியமானது நாகவாரா ஏரியாகும். இங்கு படகு சவாரியும் உள்ளது. பார்வையாளர்கள் இதில் பயணித்து, ஏரியையும், லும்பினி கார்டனையும் ரசிக்கலாம்.குழந்தைகளுக்காகவே தோட்டத்தில் சறுக்குகள், ஊஞ்சல்கள் உட்பட விளையாட்டு பகுதியும் அமைந்து உள்ளது.காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி, ஜாக்கிங் செய்வோருக்கென பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளனஅக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இங்கு செல்வது ஏற்றதுபூங்காவை பராமரிப்பதற்காக 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். குடிநீர், தின்பண்டங்கள் கொண்டு செல்லுங்கள். பூங்கா அருகில் பார்க்கிங் வசதி உள்ளது.3_Article_0001, 3_Article_0002, 3_Article_0003லும்பினி கார்டனில் குழந்தைகளை கவர பொம்மை ரயில். (அடுத்த படம்) 1.5 கி.மீ., நீளத்துக்கு அமைந்து உள்ள லும்பினி கார்டன். (கடைசி படம்) படகில் பயணித்தபடி ரசிக்கலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி