உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / பெலகாவியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

பெலகாவியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. பெலகாவி தன் எல்லைகளை மஹாராஷ்டிரா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய பல முக்கிய இடங்கள் உள்ளன. இயற்கை சூழ்ந்த பல பகுதிகள் உள்ளன. இதனாலே, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணியர் பெலகாவிக்கு வருகை தருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்கள் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன. பெலகாவி கோட்டை பெலகாவியில் உள்ள முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்று பெலகாவி கோட்டை. இந்த கோட்டையை கைப்பற்ற பல சண்டைகள் நடந்தன. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலும் கோட்டை இருந்துள்ளது. இந்த கோட்டை, 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. ஹிந்து, முஸ்லிம், ஜெயின்கள் ஆகியோரும் ஆட்சி செய்தனர். கோட்டைக்குள் இன்றும் ஜெயின் கோயில் மற்றும் மசூதிகள் உள்ளன. இதை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. இது பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. கிட்டூர் அரண்மனை ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளி கிட்டூர் ராணி சென்னம்மா பிறந்து வளர்ந்த கிட்டூர் அரண்மனை உள்ளது. அவரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள், பயன்படுத்திய பொருட்கள் போன்றவை அரண்மனை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இது பெரும்பாலான சுற்றுலாப் பயணியரை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு கிட்டூர் அரண்மனை ஒரு சொர்க்கம் என சொல்லலாம். ஜம்போட்டி மலைகள் பெலகாவி நகரத்திற்கு அருகில் உள்ளது, ஜம்போட்டி மலைகள். இந்த மலை ஆயிரக்கணக்கான மரங்களுடன் பசுமையாக காட்சி அளிக்கிறது. பசுமையான மலை, அடர்ந்த காடு, குளிர் காற்று என, இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. தேவாலயம் செயின்ட் மேரி தேவாலயம் உள்ளது. இது ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட தேவாலயம் ஆகும். தேவாலயத்தின் கட்டுமானங்கள் பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கின்றன. சுற்றுலா செல்வோர் கட்டாயம் இந்த தேவாலயத்திற்கும் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தேவாலயம் ஆகும். இப்படி கோட்டை, அரண்மனை, மலை, தேவாலயம் என அனைத்து இடங்களையும் நீங்கள் பெலகாவியில் சுற்றி பார்த்து மகிழலாம். இப்படி ஒரே மாவட்டத்தில் பல இடங்களை பார்க்கும் போது, பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், சொந்த அல்லது தனியார் வாகனங்களில் செல்வது சிறப்பாக இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை