உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / இயற்கையின் வரம் தேவராயனதுர்கா

இயற்கையின் வரம் தேவராயனதுர்கா

பெங்களூரில் இருந்து 72 கி.மீ., தொலைவில் துமகூரு மாவட்டம். துமகூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது தேவராயனதுர்கா. 3,940 அடி உயரம் கொண்ட இம்மலையில், யோக நரசிம்மர் மற்றும் போக நரசிம்மர் கோவில்கள் அமைந்துள்ளன.மலை அடிவாரத்தில் போக நரசிம்மர் கோவிலும், மலையில் யோக நரசிம்மர் கோவிலும் அமைந்துள்ளது. மலையேற்றத்துக்கு ஏற்ற இடம். மலை உச்சிக்கு செல்ல, போக நரசிம்மர் கோவில் அருகில் படிக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளன.அத்துடன் மலையின் உச்சிக்கு செல்ல சாலை வசதியும் உள்ளது. வாகனங்களில் வருவோர் சுலபமாக செல்லலாம்.இங்கு நாமதா சிலுவே இயற்கையாக உருவான நீரூற்று, ஜெயமங்கலி ஆறு தோன்ற காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் தேவராயனதுர்கா புகழ் பெற காரணமாகும். இதுபோன்று ராமதீர்த்தா, தனுஷ் தீர்த்தா என மேலும் இரண்டு நீரூற்றும் உள்ளன.கோவில் அருகில் பெரிய அளவில் அமைந்து குகைக்கு ராமா - சீதா - லட்சுமா என கூறுகின்றனர். மார்ச் / ஏப்ரலில் இங்கு போக நரசிம்ம கோவிலில் தேர் திருவிழா நடைபெறும்.இவ்விழாவின்போது, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் வருகை தந்து விமர்சையாக கொண்டாடுவர். மே மாதத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி ஜெயந்தியைநரசிம்மர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.

எப்படி செல்வது?

பெங்களூரு அருகில் உள்ளதால், ரயிலில் செல்வோர், துமகூரு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் பஸ்சில் செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ