இனி ஸ்மார்ட் வாட்ச் வேண்டாம்..! விரைவில் வரவுள்ளது சாம்சங்கின் ஸ்மார்ட் மோதிரம்..!
தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் புதுமைக்குப் பெயர்போன நிறுவனம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சாம்சங், தற்போது டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் ஆக்சசரி, டிவியை அடுத்து ஸ்மார்ட் ரிங் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த மோதிரத்தை உங்கள் விரலில் அணிந்துகொண்டால் நீங்கள் ஃபிட்னஸ் வாட்ச் அணிந்திருப்பதற்கு சமம். எப்படி எனக் கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.சாம்சங் ஸ்மார்ட் ரிங்-ல் பிசிபி போர்டில் உள்ளதுபோல மைக்ரோபிராஸசர் கோடுகள் அமைந்திருக்கும். உங்கள் உடலின் காலநிலை, இதயத்துடிப்பு, நடக்கும் வேகம் உள்ளிட்டவற்றை இவை கணித்து துல்லியமாகக் கூறிவிடும். இந்தத் தகவல்களை நீங்கள் உங்கள் கணினி, ஸ்மார்ட்போனில் பார்த்துக்கொள்ளலாம். சாதாரண மோதிரம்போல இருக்கும் இந்த ஸ்மார்ட் ரிங், உங்களது ரத்த அழுத்தத்தைக்கூட கணித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.