/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம் | aadi krithigai | Murugan Temple
முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம் | aadi krithigai | Murugan Temple
ஆடி கிருத்திகை திருவிழா - கந்தனுக்கு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்! இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்து வருகின்றனர். ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட்டால், கிரகதோசம், திருமணத்தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பம்பை, உடுக்கை முழங்க, அரோகரா கோஷத்துடன் 5 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர்
ஜூலை 29, 2024